சென்னை மேயர் தேர்தல் - தீவிர ஓட்டு வேட்டையில் பாலகங்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பாலகங்கா தீவிரஓட்டுவேட்டையில் இறங்கியுள்ளார்.

மத்திய சென்னை அதிமுக செயலாளராக இருக்கும் பாலகங்கா சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில்போட்டியிடுகிறார். தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசிபெற்ற அவர் அதன் பிறகு தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி விட்டார்.

தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் அவர் புதன்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் ஓட்டு வேட்டையாடினார்.வியாழக்கிழமையும் அவர் பல இடங்களில் ஓட்டு வேட்டையாடுகிறார்.

பாலகங்காவுக்கு ஆதரவாக அதிமுகவில் உள்ள சினிமா நட்சத்திரங்களான எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, குண்டுகல்யாணம், நடிகை ராதா உள்ளிட்டோரும் பிரசாரம் செய்யவுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற