சோனியா காந்தியை பிரச்சாரத்துக்கு அழைக்க தமிழக காங்கிரஸ் முயற்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான தனி அணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய சோனியாகாந்தியை அழைக்க தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் தேசிய மதசார்பற்ற அணி என்ற தனி அணி அமைந்துள்ளது. இந்த அணியில்காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகள்இடம்பெற்றுள்ளன.

இந்தக் கட்சிகள் தங்கள் அணியின் வெற்றியை அதிகரிக்க பலவித பிரச்சாரத் திட்டங்களை வகுத்தள்ளன.

அவற்றுள் ஒன்றுதான் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியை சென்னை, மதுரை, கோவைஅல்லது திருச்சியில் பிரசச்சாரக் கூட்டத்தில் பேசவைக்கும முயற்சி.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் மாறிலக் கட்சித் தலைவர்களே அவ்வளவாக பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார்கள்என்ற நிலையில், அகில இந்தியக் காங்கிரஸ் தலைவியான சோனியா இதற்கு சம்மதிப்பாரா என்பது சந்தேகமே.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற