For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் வன்முறை: அமெரிக்க விமானங்கள் தாக்கி 700 தலிபான்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

மஷார்-ஏ-ஷெரீப்:

மஷார்-ஏ-ஷெரீப் நகரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலிபான்கள் மற்றும் அல்-காய்தா தீவிரவாதிகள் பெரும்வன்முறையில் இறங்கினர். இதில் ஒரு சி.ஐ.ஏ. அமைப்பைச் சேர்ந்த அமெரிக்க வீரரும் பல நார்த்தர்ன் அலையன்ஸ்பாதுகாவலர்களும் இறந்தனர்.

இதையடுத்து அமெரிக்க விமானங்கள் அந்த சிறைச் சாலையின் மீது பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தின.இதில் தலிபான்கள் உள்பட 700 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான், செசன்யா, அரேபியாவைச் சேர்ந்தவர்கள்.

நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான தலிபான்கள், அல்-காய்தா தீவிரவாதிகள்மஷார்-ஏ-ஷெரீப் நகரில் ஒரு பழைய கோட்டையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்தத் தீவிரவாதிகளில் ஒருவன் நேற்று தனது உடையில் மறைத்து வைத்திருந்த கிரணைட் குண்டை வெடிக்கச்செய்தான். இதில் அவன் உடல் சிதறி இறந்தான். இதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திய தலிபான்தீவிரவாதிகள், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த நார்த்தர்ன் அலையனஸ் படையினரிடம் துப்பாக்கிகளைப் பறித்துத்சரமாரியாக சுட்டனர்.

இதில் பல நார்த்தர்ன் அலையன்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடன் பாதுகாப்புப் பணிகளைபார்வையிட்டுக் கொண்டிருந்த அமெரிக்க வீரர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வன்முறையை சமாளிக்க நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் டாங்கிகளையும் பீரங்கிகளையும் கொண்டுதாக்குதல் நடத்தினர். ஆனால், தலிபான்களின் அட்டூழியம் அதிகரித்தது. சரமாரியாக அவர்கள் தாக்குதல்நடத்தினர். கதவுகளை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றனர்.

இதையடுத்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளுக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக அமெரிக்க விமானங்கள்அந்த சிறைச் சாலை மீது பயங்கர தாக்குதல் நடத்தின. இதில் அந்த கோட்டை சிதறியது. அனைத்துப் புறமும்பயங்கர தீ பற்றிக் கொண்டது. பாதுகாப்புக்கு இருந்து நார்த்தர்ன் அலையன்ஸ் படைகளும் கடும் தாக்குதல்நடத்தின.

இதில் 700 தலிபான்களும் அல்-காய்ா தீவிரவாதிகளும் பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் பலத்தகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் சாவு:

பலியான தீவிரவாதிகளில் தலிபான்கள் தவிர பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்கானிஸ்தானில் சரணடைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளை காப்பாற்றி பாகிஸ்தானுக்கு அழ்ைதது வர அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்தத் தீவிரவாதிகளை முஷாரப் காஷ்மீருக்கு அனுப்புவார் என்று இந்தியா கருதியது. இதனால், பிடிபட்ட,சரணடைந்த தீவிராவாதிகளை சிறைகளில் வைக்குமாறு நார்த்தர்ன் அலையன்சிடம் இந்தியா கோரிக்கைவிடுத்திருந்தது. அமெரிக்காவும் இதற்கு சம்மதித்தது. இதையடுத்து பிடிபடும் பாகிஸ்தானியர்களை நார்த்தர்ன்அலையன்ஸ் சிறைகளில் அடைத்து வைத்துள்ளது.

இப்போது சிறைக்குள்ளும் சேட்டை செய்த இந்தத் தீவிரவாதிகள் அமெரிக்க விமானங்களின் தாக்குதலில்உயிரிழந்துள்ளனர். சிறையில் இருந்த பெரும்பாலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்காதெரிவித்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த சாவுகளுக்கு எந்த நாடும் கவலை தெரிவிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தானில் பல மதவாதக்கட்சிகள் தான் இந்தத் தாக்குதலுக்காக கண்டனம் தெரிவித்துள்ளன.

இறந்தவர் சி.ஐ.ஏ. உளவாளி:

இத் தாக்குதலில் இறந்த அமெரிக்கர் சி.ஐ.ஏ. உளவு அமைப்பைச் சேர்ந்தவர். இத் தாக்குதலில் இன்னொருஅமெரிக்கரும் காயமடைந்ததாக பென்டகன் உறுதி செய்துள்ளது.

சிறைகளில் அடைக்கப்படும் தலிபான்கள் வன்முறையில் இறங்கினால் உடனடியாக அவர்களை ஒட்டுமொத்தமாகசுட்டுக் கொன்றுவிடுமாறு நார்தர்ன் அலையன்சுக்கு அமெரிக்கா அறிவுருத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X