For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30 ஆண்டுகளாக விசாரணைக்கே வராத வழக்கு !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு வழக்கு இன்னும் விசாரணைக்குக் கூட வரவில்லை என்றால் ஆச்சயமாகஇருக்கிறதல்லவா? அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாத? என்று கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் 8 பேர்சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்துசட்டவிரோதமாக மரங்களை வெட்டிக் கடத்தியதாக 48 பேர் மீது 1972ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் மீது 1977ம் ஆண்டு குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு கிருஷ்ணகிரி கூடுதல் சிறப்புநீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை. வெட்டப்பட்டதாக கூறப்படும் மரங்களின் மதிப்பு அப்போதைய விலையில்ரூ. 35,000 ஆகும்.

தற்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களில் 20 பேர் உயிருடன் இல்லை. அரசுத் தரப்புசாட்சிகள் 420 பேல் 81 பேர் இறந்து விட்டனர்.மற்றவர்களும் வயதாகிவிட்டதால் பல்வேறு உடல் நலக் குறைவுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்களில் 8 பேர் இந்த வழக்கை கைவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளனர்.

தங்களது மனுவில் அவர்கள், இந்த வழக்கே பொய்யான வழக்கு. நாங்கள் மரங்களை வெட்டியதாக கூறுவது சரியல்ல. நாங்கள்மரங்களை வெட்டும் காண்டிராக்டர்களிடம் கூலிகளாக வேலை பார்த்தோம். அவ்வளவுதான். இப்போது அந்தகாண்டிராக்டர்களும் உயிருடன் இல்லை.

காலம் கடந்து விட்டதால் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வது குறித்து அரசு சிந்தித்து வருகிறது. இந்த நிலையில்கிருஷ்ணகி கோர்ட்டில் விசாரணை தொடங்க அனுமதிப்பது சரியாக இருக்காது, பயனும் இருக்காது.

இந்தச் சூழ்நிலையில் கோர்ட்டில் விசாரணை தொடங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோயுள்ளனர்.

மனுவை விசாத்த நீதிபதி நாகப்பன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தர்மபு மாவட்ட ஊழல் தடுப்பு இயக்குநிருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X