திமுகவுக்கு ஆதரவாக பா.ஜ.க. பிரசாரம்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் வைகை சேகருக்கு ஆதரவாக தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் வருகிற 11ம் தேதி முதல்பிரசாரம் செய்கிறார்கள்.
11ம் தேதி முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே பிரசாரம் செய்கிறார். மாநிலத் தலைவர் கிருபாநிதி 12ம் தேதியும், பொதுச்செயலாளர் இல.கணேசன் 13ம் தேதியும், மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்14ம் தேதியும் பிரசாரம் செய்கிறார்கள்.
அகில இந்திய அளவில் எந்த பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களும் பிரசாரத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று ஏற்கனவேஅறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க.?
மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இதுவரை யாரும் ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்யவரவில்லை. இருப்பினும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசும், ஜி.கே.மணியும் பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று தெரிகிறது.
திமுக தலைவர் கருணாநதி 13ம் தேதி ஒரு நாள் மட்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஏற்கனவே மு.க.அழகிரி ஆண்டிப்பட்டியில் முகாமிட்டுதீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்து வருகிறார். பொதுச் செயலாளர் அன்பழகன் 13ம் தேதி முதல்பிரசாரம் செய்கிறார்.
திமுக ஆதரவு நடிகர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நடிகை ராதிகா பிரசாரம் செய்ய மாட்டார் என்று தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications