இது சாதாரண வெற்றி அல்ல... இது ஒரு வரலாறு: ஜெ. உணர்ச்சிப் பேச்சு
சென்னை:
என் வாழ்நாளிலேயே மிக முக்கியமான பிறந்த நாள் இது என ஜெயலலிதா கூறினார்.
ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றதையடுத்து போயஸ் கார்டனில் நிருபர்களைச் சந்தித்த ஜெயலலிதா கூறியதாவது:
இன்று ஆண்டிப்பட்டியில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறோம். என் வாழ்நாளிலேயே எனக்குக் கிடைத்த மிகசிசிறந்த பிறந்த நாள் பரிசு இது தான். இதற்காக ஆண்டிப்பட்டி மக்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆண்டிப்பட்டியை தமிழகத்திலேயே மிகச் சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அதே போல தமிழகத்தைஅனைத்துத் துறைகளிலும் முதன்மையான மாநிலமாக மாற்றிக் காட்டுவேன். அதுவரை நான் ஓய மாட்டேன்.
கருணாநிதியின் சதிகளைத் தோற்கடித்து எனக்கு இந்த வெற்றி தேடித் தந்த அதிமுக தொண்டர்களுக்கும்மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் போன்ற வேதனைகளை, சோதனைகளை, துயரங்களை இந்த நாட்டில், ஏன் இந்த உலகத்திலேயே வேறுஎந்த அரசியல் தலைவரும் சந்தித்தித்திருக்க மாட்டார். அவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி இன்று வென்றுகாட்டியுள்ளேன். இனிமேலும் வருகிற எல்லா பிரச்சனைகளையும் முழுத் தெம்போது எதிர்த்து நிற்பேன். நிச்சயம்வெல்வேன்.
எந்தக் கட்சியின் துணையும் இல்லாமல் வென்று காட்டியுள்ளோம். இனியும் அதிமுகவின் வெற்றிகள் தொடரும்.
5 ஆண்டுகளுக்கு முன் எனது வரலாறும், அதிமுகவின் கதையும் முடிந்து விட்டது என அனைவரும் கூறினார்கள்.அது தவறு என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.
இந்த வெற்றி ஒரு வரலாறு. இந்த வரலாறு எதிர்காலத்தில் துன்பங்களைச் சந்திப்பவர்களுக்கு ஒரு பாடம்.விரக்தியின் விளிம்புக்குச் செல்பவர்களுக்கு, துயரங்களை, வேதனைகளைச் சந்திப்பவர்களுக்கு மீண்டும் வாழ்வில்நம்பிக்கை ஏற்பட என் வாழ்க்கை ஒரு பாடமாக அமையும் என்றார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications