For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஷாரபின் நாடகம் அரங்கேறவில்லை

By Staff
Google Oneindia Tamil News

அல்மாட்டி (கஜாகிஸ்தாண்):

கஜகிஸ்தானில் நடந்த 16ஆவது தெற்கு ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் முஷாரப், வாஜ்பாயுடன் கை குலுக்குவது போன்ற நாடகம் எதைதயும் அரங்கேற்றவில்லை.

நேபாளத்தில் நடந்த மாநாட்டில்போது தன்னை கண்டுகொள்ளாமல் இருந்த இந்திய பிரதமரை அவர் அமர்ந்திருந்து இடத்துக்கே சென்று முஷாரப் கை குலுக்கி நாடகமாடினார். இந்த மாநாட்டிலும் அப்படி ஏதாவது செய்வார் என்று நிருபர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. மேலும் முஷாரபை பார்ப்பதைக் கூட வாஜ்பாய் தவிர்த்துவிட்டார்.

பிரதமர் வாஜ்பாய் கஜாகிஸ்தான் தலைவர் நூர்சுல்தானுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, முஷாரப் சீன தலைவருடன் பேசிக் கொண்டிருந்தார். மேலும் அனைத்து தலைவர்களும் போட்டோ எடுப்பதற்கு வந்து நின்ற போதும் இருவரும் சந்திப்பதை தவிர்த்தனர்.

முஷாரப் பாகிஸ்தான் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறிய போது பிரதமர் வாஜ்பாயை பார்த்தார். ஆனால் மாநாடு முழுவதிலும் வாஜ்பாய் முஷாரபை பார்ப்பதை தவிர்த்தார்.

சமரசத்து ஈரான் அழைப்பு:

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் இல்லாமல் இரு நாடுகளும் போரை தவிர்க்க வேண்டும் என்று ஈரான் கூறியுள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கமல் கஸாரி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தாரிடம் நேற்று டெலிபோனில் பேசினார்.

இரு நாடுகளும் போரை தவிர்க்க, ஈரான் இரு நாடுகளுக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

பிரிட்டிஷ் விசா நிறுத்தம்:

இந் நிலையில் பிரிட்டன் செல்ல புதிதாக விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விசா கொடுப்பதை அந் நாடு நிறுத்திவிட்டது. அந் நாட்டில் பயிலச் செல்லும் மாணவர்களுக்கு கூட விசா கொடுப்பதை பிரிட்டிஷ் தூதரகம் நிறுத்தி வைத்துள்ளது.

திரும்ப அழைக்கிறது பிலிப்பைன்ஸ்:

பிலிப்ன்ைஸ் அதிபர் அர்ரோயா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருக்கும் தனது நாட்டு தூதர்களை அந்நாடுகளை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதே போல பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் உடனே பாதுகாப் கருதி வெளியேறிவிடும்படி அந் நாடு கூறியுள்ளது.

ஐரோப்பிய யூனியன்:

ஐரோப்பிய யூனியனும் இப்போது இந்தியா, பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம் என தங்கள் உறுப்பு நாடுகளுக்ககு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியத் தூதரகத்திலிருந்து 30% அமெரிக்கர்கள் வெளியேறிவிட்டதாகவும், இன்னும் இரணடு நாட்களில் பெரும்பாலும் அனைவரும் வெளியேறிவிடுவார்கள் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து படிக்க இருந்த மாணவர்களையும் அமெரிக்கா தடுத்துவிட்டது.

ஓ.என்.ஜி.சிக்கு பாதுகாப்பு:

இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆலைக்குச் சொந்தமான கடல் எண்ணெய் கிணறுகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு மத்திய தொழிற் படையினர் மற்றும் கடற்படையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எண்ணெய் கிணறுகள் 24 மணி நேரமும் கடற்படையினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா பதிலடி:

காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. கடந்த 24 மணி நேரம் தொடர்ந்து எல்லையில் (இன்டர்நேஷனல் பார்டர்) சண்டை நடந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு நிபந்தனை:

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் பாயும் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது அந் நாட்டுக்கு இந்தியா முன் கூட்டியே எச்சரிக்கை செய்வது வழக்கம். வெள்ளப் பெருக்கு, நீர் மட்டம், பனி உருகுதல், நதிகளை ஒட்டிய பகுதியில் தட்ப வெப்ப நிலை, பனிப் பொழிவு ஆகிய விவரங்களை இதுவரை இந்தியா இலவசமாக தந்து வந்தது. இனிமேல் பணம் கொடுத்தால் மட்டுமே இந்தத் தகவல்கள் தரப்படும் என்று இந்தியா கூறிவிட்டது.

இந்தத் தகவல் பரிமாற்றத்திற்கு ஆண்டொண்றுக்கு பாகிஸ்தான் இந்தியாவிற்கு 1.8 மில்லியன் டாலர்கள் தரவேண்டும் என்று கூறப்பட்டுவிட்டது.

முதலில் இந்தியா 3.5 மில்லியன் டாலர்கள் கேட்டது. பின்னர் பாகிஸ்தான் கெஞ்சியதையடுத்து இதை 1.8 மில்லியன் டாலராகக் குறைத்துக் கொண்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X