For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்கிறது

By Staff
Google Oneindia Tamil News

மாண்டி (காஷ்மீர்):

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து வருவது குறையவில்லை எனபூஞ்ச் மற்றும் ரஜெளரி மாவட்ட எல்லைப் பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.

வழக்கமாக அக்டோபர் முதல் மலைப் பகுதியில் பனி படர்ந்துவிடும் என்பதால் ஜூன் முதல் செப்டம்பர் வரைதீவிரவாதிகள் ஊடுருவல் மிக அதிகமாக இருக்கும்.

இம்முறையும் உலக அளவில் இவ்வளவு நெருக்குதல் இருந்தும் ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்தே அதிகஅளவிலான தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக உளவுப் பிரிவினரும்தெரிவிக்கின்றனர்.

இப்போது இந்தியாவுக்குள் அனுப்பப்பட்டு வரும் தீவிரவாதிகளில் பெரும்பான்மையானவர்கள்ஆப்கானிஸ்தானின் தலிபான்- அல்-காய்தா தீவிரவாதிகள் என்றும் தெரிகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள காஷ்மீரின் சுரான்கோட்டில் இருந்து இருந்து இந்தத்தீவிரவாதிகளுடன் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ.முகம்மத், ஹிஸ்புல் முஜாகிதீன், ஹர்கத்-உல்-முஜாகிதீன்,லஹ்ரீக்-ஏ-ஜிகாதி-இஸ்லாமி, ஹர்கத்-உல்-ஜிகாதி ஆகிய தீவிரவாதிகள் இந்தியாவின் பூஞ்ச் பகுதியில் ஊடுருவிவருகின்றனர்.

இரவு நேரத்தில் ஒருவர் ஒருவராக இந்தக் கும்பல் அந்த மலைகளும், அடர்ந்த காட்டுப் பகுதிகள் வழியாகவும்நுழைந்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்திய ராணுவம் எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும் அவ்வளவு பெரிய மலைப் பகுதியை கண்காணிப்பதுஎளிதில்லை என்கின்றனர் இந்த மக்கள்.

மேலும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கித் தாக்குதலில் இறங்குகிறது. இதையடுத்து இந்தியப்படைகள் பதுங்கியிருந்து தாக்க வேண்டியுள்ளது. இந்தியப் படைகள் பதுங்கும் இடைவெளியில் இந்தத்தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்துவிடுகின்றனர்.

இதனால் இவர்களை பாகிஸ்தான் ராணுவம் தான் இந்தியாவுக்குள் அனுப்புவது உறுதியாகிறது என்கின்றனர்உளவுப் பிரிவினர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 500 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக வயர்லெஸ் செய்திப் பரிமாற்றத்தைஇடைமறித்துக் கேட்ட இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தப் பகுதியில்இந்திய ராணுவத்தால் 184 தீவிராவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை வைத்தே இந்த இடத்தில்தீவிரவாதிகளின் ஊடுருவல் அளவை அறிந்து கொள்ளலாம்.

ஜூன் மாதத்துக்குள் எவ்வளவு பேர் முடியுமோ அவ்வளவு பேர் இந்தியாவுக்குள் நுழைந்துவிட வேண்டும் எனதீவிரவாத அமைப்புகளிடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் சர்வதேச நெருக்குதல் காரணமாகதீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப எங்களால் உதவ முடியாமல் போகலாம் எனவும் அவர்களிடம்பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளதாக இந்திய உளவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்த 3,4 மாதங்களுக்குத் தேவையான பணம், ஆயுதங்களுடன் அவர்களை பாகிஸ்தான் அனுப்பி வருகிறது.மேலும் 2000 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழையக் காத்துக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முஷாரபுக்கு ரஷ்யா சூடு:

ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தப் போகிறேன் என்று கூறி வந்தபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபக்கு ரஷ்யா மூக்குடைத்துள்ளது.

கஜாகிஸ்தானில் புடினை சந்தித்த முஷாரப் அவரை ரஷ்யா வந்து சந்திக்க விரும்புவாதக் கூறினார். இதை ரஷ்யாஏற்றது.

இதன்மூலம் இந்திய-ரஷ்ய உறவில் விளையாட முஷாரப் முயற்சிப்பதாக இந்தியா கருதியது. தனது மனவருத்தத்தை பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவை மாஸ்கோவுக்கு அனுப்பி தெரியப்படுத்தினார் பிரதமர்வாஜ்பாய். ரஷ்ய பாதுகாப்பு அமைப்பின் பொன்விழா கொண்டாடங்களில் கலந்து கொள்ளச் சென்ற மிஸ்ராபாகிஸ்தானை ஒதுக்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து முஷாரபை மாஸ்கோவுக்கு வர வேண்டாம் என ரஷ்யா கூறிவிட்டது. தீவிரவாதிகளைஇந்தியாவுக்குள் அனுப்புவதை நிறுத்தினால் மட்டுமே முஷாரபை மாஸ்கோவுக்கு வரவேற்க முடியும் என ரஷ்யாஅறிவித்துள்ளது. புடின் மிக பிசியாக இருப்பதால் உடனடியாக முஷாரபை சந்திக்க அவரால் முடியாது என ரஷ்யாகூறியுள்ளது.

இது தவிர இந்த ஆண்டு இந்தியா வர மிக ஆர்வமாக இருப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்தியாவுடனான தனது நெருக்கத்தை உலக நாடுகளுக்கு, குறிப்பாக, பாகிஸ்தானுக்கு தெளிவாகஉணர்த்திவிட்டது இந்தியா.

ரஷ்யாவின் இந்த அறிவிப்புக்கு இந்தியா பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்தியாவை நன்றாக புரிந்துவைத்துள்ள நாடு ரஷ்யா தான் என மிஸ்ரா கூறியுள்ளார்.

தனது படைகளை காக்க அமெரிக்கா உத்தரவு:

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் உடனடியாக பாகிஸ்தானில் உள்ள தனது படைகளை காப்பாற்றிவெளியேற்றத் திட்டம் தயார் செய்யுமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அந் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இப்போது சுமார் 1,100 அமெரிக்கப் படையினர் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X