பெண்ணுக்கு இ-மெயில் மூலம் "செக்ஸ்" படங்களை அனுப்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இ-மெயில் மூலம் தெரிந்த பெண் ஒருவருக்கே தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி வைத்த சென்னையைச்சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார் சந்திரசேகரன்(25).

இவர் பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணுடன் ஏற்கனவே அறிமுகமானவர்.

ஆனாலும் விரச எண்ணம் அதிகம் கொண்ட சந்திரசேகரன் அந்தப் பெண்ணுக்கு இ-மெயில் மூலம் தொடர்ந்துஆபாசப் படங்களை அனுப்பியுள்ளார்.

ஆனால் தான் அனுப்பியது என்று அந்தப் பெண்ணுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக வெவ்வேறு பெயர்கொண்ட இ-மெயில் முகவரிகள் மூலம் இந்த ஆபாசப் படங்களை சந்திரசேகரன் அனுப்பியுள்ளார்.

மேலும் சென்னையிலிருந்து அனுப்பினால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்த சந்திரசேகரன், ஈரோடுமற்றும் பெங்களூரிலிருந்தும் அந்தப் பெண்ணுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து டி.எஸ்.பி. லட்சுமண் சிங் தலைமையில்தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தீவிர விசாரணையின் முடிவில் சென்னையிலிருந்த சந்திரசேகரன் தான் இந்தப் படங்களை அனுப்பியிருப்பதைப்போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சந்திரசேகரனைப் போலீசார் கைது செய்தனர். அவர் மீது "சைபர் குற்றங்கள்" பிரிவின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+