For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகை அணையில் கரைந்த "மதுரை விநாயகர்கள்"

By Super
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை நகரில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு வைகை அணைக்கு அருகே உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டன.

மதுரை நகரில் இந்து முன்னணி சார்பில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அவற்றை லாரிகளில் ராமேஸ்வரம் எடுத்துச் சென்று கரைக்கமுடிவு செய்தனர்.

ஆனால் ராமேஸ்வரம் அதிக தூரமாக இருப்பதால் பக்கத்திலேயே உள்ள வைகை அணைக்கு சிலைகளைக்கொண்டு சென்று கரைக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாகமதுரை-வைகை ஆற்றுக்குக் கொண்டு வரப்பட்டன.

பின்னர் அங்கிருந்து அனைத்து விநாயகர் சிலைகளும் லாரிகளில் ஏற்றப்பட்டு வைகை அணைக்குக்கொண்டுசெல்லப்பட்டன.

அதன் பிறகு அங்கு வைகை அணைப் பகுதிக்கு அருகே ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் அந்த சிலைகள்கரைக்கப்பட்டன.

பெரிய விநாயகர் சிலைகள் வைகை அணை அருகே உள்ள ஆற்றிலும், சிறிய சிலைகள் சோழவந்தானில் உள்ளஒரு குளத்திலும் கரைக்கப்பட்டன.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X