• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் வீடுகளில் சோதனை: கோடிக்கணக்கில் பணம் சிக்கியது

By Super
|

மதுரை:

மதுரையில் ஆர்.டி.ஓ. அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனைகளில்கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள், ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மதுரை மட்டுமல்லாமல் நாமக்கல், கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி ஆகியஊர்களிலும் சோதனை நடைபெற்றது.

மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. மதுரையில் மட்டும் 8 இடங்களில் போலீசார்சோதனை மேற்கொண்டனர்.

லஞ்சம் சர்வசாதாரணமாகப் புழங்கும் பல இடங்களில் ஆர்.டி.ஓ. அலுவலகமும் ஒன்று.

லைசென்ஸ், ஆர்.சி. புக் என்று பல வசதிகளையும் பெறுவதற்காக இந்தப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு நிறையபணத்தை "தள்ளித்" தான் ஆக வேண்டும். பிரேக் இன்ஸ்பெக்டர்கள், புரோக்கர்கள், பியூன்கள் என இவர்கள் ஒருகொள்ளைக் கும்பலாகவே செயல்பட்டு வருகின்றனர்.

டூ வீலர் லைசென்ஸ் எடுக்கச் செல்பவர்கள் ஒழுங்காக 8 போட்டாலும் ஏதாவது நொட்டு சொல்லி லஞ்சம்கேட்பார்கள். கார் ஓட்ட லைசென்ஸ் வாங்க நேரடியாக அலுவலகத்தை அணுகினால் கார் டிரைவிங் சொல்லித்தரும் நிறுவனங்கள் வழியாக வரச் சொல்வார்கள்.

பணம் மட்டும் தந்துவிட்டால் பிரேக் இன்ஸ்பெக்டர்கள் எந்த வண்டிக்கு வேண்டுமானாலும் லைசென்ஸைபுதுப்பித்துத் தருவார்கள்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு புதிய மினி பஸ்வாங்க வேண்டுமானால் ரூ.6 லட்சம் வரை ஆகும்.

இந்தச் செலவைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ஏற்கனவே காலாவதியான பழைய பஸ்களைப்புதுப்பித்து மினி பஸ்களாக உருவாக்கலாம். அவ்வாறு புதுப்பிக்கப்படும் பஸ்களுக்கு சட்டப்படி சேசிஸ் நம்பர்,ஆர்.சி. புக் உள்ளிட்ட பலவற்றையும் புதுப்பிக்க வேண்டும். இதற்கும் நிறைய செலவாகும்.

ஆனால் ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் "தள்ளினால்" போதும். அனைத்துமே போலியாகத்தயாரித்துக் கொடுக்கப்படும். அதிகபட்சம் ஒரு நாளிலேயே அனைத்தும் தயாரிக்கப்பட்டு, கையோடு வாங்கிக்கொண்டு பஸ்சுடன் சென்று விடலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுரையில் மட்டும் இதுபோல 42 மினி பஸ்கள் "புதுப்பித்துக்"கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.31.50 லட்சம் கை மாறியுள்ளது.

ஆர்.டி.ஓ. ஆபிஸ்களில் லஞ்சம் மிக மோசமான நிலையை எட்டிவிட்டதால் திலகவதி ஐ.பி.எஸ். தலைமையிலானலஞ்ச ஒழிப்புப் போலீசார் கடந்த ஆறு மாதங்களாக அவ்வப்போது சோதனை நடத்தி வந்தனர். ஆனாலும்நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது தொடர்பாகப் பல தகவல்களையும் ரகசியமாக சேகரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாகசோதனையில் இறங்கினர்.

ஆர்.டி.ஓக்கள் மட்டுமல்லாமல் அவருடைய உதவியாளர்கள், புரோக்கர்கள் ஆகியோருடைய வீடுகளிலும்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 50 லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தினர்.

வீடுகளில் ஒரு இடத்தையும் அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை. அப்போது தான் சமையலறை, சரக்கு அறைபோன்ற இடங்களிலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மதுரை தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பியூனாக இருந்து ஓய்வு பெற்ற முருகேசன் என்பவருடைய வீட்டில்சோதனையிடும் போது, பலசரக்கு டப்பாக்களில் எல்லாம் பணம் இருந்தது தெரிய வந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் முருகேசனுக்குத் தெரியாமலேயே அவருடைய மனைவி இவ்வாறு பதுக்கிவைத்தது தான். இதைக் கண்டு முருகேசனே அதிர்ச்சி அடைந்தார்.

கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றியதைப் பார்த்து முருகேசனும் அவருடைய மனைவியும்தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருந்தனர்.

இவர் வீட்டிலிருந்து மட்டும் ரூ.8 லட்சத்திற்கும் மேலான பணம், 80 பவுன் நகை கைப்பற்றப்பட்டன. இவை தவிரவங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீடு ஆகியவற்றுக்கானஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

லஞ்சம் மூலம் ஒரு ஆர்.டி.ஓ. ஆபிஸ் பியூனே கிட்டத்தட்ட ஒரு கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ளான்.

இதேபோல் மொத்தம் 15 இடங்களில் நேற்று நடந்த சோதனையின் போது மட்டும் பல கோடி மதிப்பிலானஆவணங்களும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுரையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மதுரை நீதிமன்றத்தில் நேற்றே ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் மதுரையில் முகாமிட்டிருந்த சமூக நலத்துறை அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்புபோலீசார் சோதனை நடத்தி லட்சக் கணக்கான பணத்தைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் ஆர்.டி.ஓ. ஊழியர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளதால், மற்ற துறைகளைச்சேர்ந்தவர்கள் "வயிற்றில் புளி கரைந்த" நிலையில் உள்ளனர். எந்நேரத்திலும் தங்களுடைய வீடுகளிலும் சோதனைநடத்தப்படலாம் என்று "கிலி"யுடன் அவர்கள் உள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X