For Daily Alerts
Just In
ஜாதி அடிப்படையில் தமிழகத்தைப் பிரிக்க முயற்சி: நல்லகண்ணு
சென்னை:
ஜாதி அடிப்படையில் தமிழகத்தைப் பிரிக்க முயற்சி நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்நல்லகண்ணு எச்சரிக்கை விடுத்தார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசுகையில்,
மாநில அரசின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மூலம் ஜாதிப் பிரிவினையை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.
திடீரென்று இந்த சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும்.
இது போன்ற முயற்சிகளை மக்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் நல்லகண்ணு.
-->


