For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்பாதிக்க வெளிநாடு சென்று கடனாளிகளாக ஊர் திரும்பும் தமிழர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ஏராளமான பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்பெரும்பாலான மக்கள் வெளிநாட்டினரிடம் அடிமைகளாக இருந்து விட்டு, ஏழைகளாகவே சொந்த ஊர்திரும்புகின்றனர் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களிடம் "பீஸ் டிரஸ்ட்" என்ற தன்னார்வ அமைப்புநடத்திய ஆய்வின் போது தான் இவ்விவரம் தெரிய வந்தது.

மலேசியா, சிங்கப்பூர், குவைத், ஷார்ஜா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் வேலை பார்த்து விட்டுத் திரும்பிய பல25 தமிழர்களிடம் இந்தத் தன்னார்வ அமைப்பு, அவர்களுடைய வெளிநாட்டு வேலை அனுபவம் குறித்துவிசாரித்தது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏராளமான சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசையோடு வெளிநாடுபோகவில்லை என்றும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தொடர்ந்தேஅவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்றனர் என்றும் "பீஸ் டிரஸ்ட்" கூறியது.

வெளிநாடுகளில் தாங்கள் பணம் சம்பாதித்த கதையை விட, அங்கு தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டகதையைத் தான் ஆய்வுக்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உருக்கத்துடன் கூறினார்கள்.

தமிழகத்தில் புற்றீசல் போலப் பெருகிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பணத்தைவாங்கிக் கொண்டு மக்களை அனுப்பி விடுவதோடு சரி. அவர்கள் என்ன ஆனார்கள் என்று கண்டு கொள்வதேஇல்லை.

இவ்வாறு அனுப்பப்படுபவர்களில் பலர் அந்த நாடுகளில் போய் ஏமாந்து நடுத் தெருவில் தான் நிற்கவேண்டியுள்ளது என்றும் நாடு திரும்பிய தமிழர்கள் புலம்பலுடன் தெரிவித்ததாக "பீஸ் டிரஸ்ட்" கூறியுள்ளது.

ஆய்வுக்குட்பட்ட 25 தமிழர்களுமே, தாங்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்த போது தங்களிடம் நன்றாகவேலை வாங்கப்பட்டதே தவிர, அதற்கான ஒழுங்கான சம்பளமோ, உரிய பயன்களோ, ஓய்வூதியமோகிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில கொடுமைகள் எல்லாம் கூட வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும்தெரிய வந்துள்ளது.

குவைத்தில் டிரைவர் வேலைக்குச் சென்ற நடராஜன் என்ற தமிழர் அவருடைய முதலாளியாலேயேகொல்லப்பட்டுள்ளார். அவருடைய உடலைக் கூட உரியவர்களிடம் அந்த முதலாளி ஒப்படைக்கவில்லை.

மன்னார்குடியிலிருந்து குவைத்துக்குச் சென்ற சந்திரகுமாரின் கதை இன்னும் வித்தியாசமானது. விடுமுறைநாட்களின் போது கூட அவருடைய முதலாளி அவரை விடுவதில்லை. ஒரு அறைக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விடுவாராம்.

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியைச் சேர்ந்த முகைதீன் என்பவர் ஷார்ஜாவுக்குச் சென்று பணத்தை இழந்ததுமட்டுமல்லாமல், கடனாளியாகத் தான் ஊர் திரும்பியுள்ளார்.

மலேசியாவில் இவ்வாறு வரும் வெளிநாட்டினரிடமிருந்து சில போலீசார் மிரட்டி அவர்களுடைய பாஸ்போர்ட்,விசா போன்றவற்றையெல்லாம் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் அங்கும் இருக்க முடியாது, ஊருக்கும்திரும்ப முடியாது. என்ன தான் செய்வார்கள்?

வெளிநாடுகளிலிருந்து வேலைக்காக வருபவர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளையோ, திட்டங்களையோபல நாடுகள் முறைப்படி வகுத்துக் கொள்வதே இல்லை என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு செல்லும் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பளிப்பது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகம்,வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இந்தஆய்வை நடத்தியவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X