For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார் மாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் மேல் சிகிச்சைக்காக சிறப்பு "ஏர் ஆம்புலன்ஸ்" விமானத்தின்மூலம் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மாறனின் செயற்கை இருதய வால்வில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அது ரத்தத்திலும் கலந்ததால்அவருடைய கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை மோசமாகப் பாதிக்கப்பட்டன.

அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மாறனை அமெரிக்கா கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படிஅவரைக் கொண்டு செல்ல சிங்கப்பூரிலிருந்து அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட சிறப்பு "ஏர் ஆம்புலன்ஸ்"விமானம் வரவழைக்கப்பட்டது.

இவ்விமானத்தின் மூலம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குக் கொண்டு செல்லப்படும் மாறன், அங்குள்ளபுகழ்பெற்ற "மெத்தடிஸ்ட்" மருத்துவமனையில் சேர்க்கப்படவுள்ளார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் சென்னை விமானநிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார் மாறன். காலை 4.50 மணிக்கு விமானம் கிளம்புவதாக இருந்தது.

ஆனால் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டதன் காரணமாக விமானம் கிளம்புவது தாமதப்படுத்தப்பட்டது.

இதையடுத்து காலை 7 மணிக்கு மாறனை ஏற்றிக் கொண்டு "ஏர் ஆம்புலன்ஸ்" விமானம் அமெரிக்காவுக்குப்புறப்பட்டது. மாறனுடன் அவருடைய மகள் டாக்டர் அன்புக்கரசி, சில டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அந்தவிமானத்தில் செல்கின்றனர்.

மாறனின் மனைவியான மல்லிகாவும் உடன் செல்வதாக இருந்தது. ஆனால் இது சிறிய விமானம் என்பதால் இடப்பற்றாக்குறை காரணமாக இதில் மல்லிகா செல்லவில்லை.

மல்லிகா அடுத்த ஓரிரு நாட்களில் வழக்கமாகச் செல்லும் பயணிகள் விமானத்தில் ஹூஸ்டனுக்குக் கிளம்பிச்செல்வார்.

இந்த "ஏர் ஆம்புலன்ஸ்" விமானம் மிகவும் சிறிய விமானம் என்பதால் இதில் சிறிதளவு பெட்ரோல் மட்டுமே நிரப்பமுடியும். எனவே அமெரிக்கா செல்லும் வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகியஇடங்களில் இந்த விமானம் நின்று செல்லும்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X