சட்டத்தை மதித்து நேர்த்திக் கடன் முறையை மாற்றிக் கொண்ட கிராம மக்கள்
மதுரை:
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் குழந்தைகளைப் புதைத்து எடுக்கும் பழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளகிராமத்து மக்கள் அதற்குப் பதிலாக குழந்தைகளை கீழே போட்டு அதைத் தாண்டி தங்களது நேர்த்திக் கடனைசெலுத்தி வருகின்றனர்.
பேரையூர் கிராமத்தில் சமீபத்தில் அப்போது அமைச்சராக இருந்த துரைராஜ் முன்னிலையில், குழந்தைகளைஉயிருடன் சில விநாடிகள் மண்ணுக்குள் புதைத்து எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்துதுரைராஜின் அமைச்சர் பதவி பறிபோனது.
மேலும் தமிழக அரசு இந்தப் பழக்கத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டமும் கொண்டு வந்து, சமீபத்தில் அதைசட்டசபையில் நிறைவேற்றியும் விட்டது. இந்த சட்டம் ஓரளவுக்குப் பலன் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூர் என்ற கிராமத்தில் முத்தாளம்மன் கோவில் திருவிழாநடந்தது. ஒவ்வொரு ஐப்பசி மாதமும் இவ்விழா நடைபெறும்.
அந்தத் திருவிழாவின் போது குழந்தைகளைப் புதைத்து எடுக்க முயற்சி நடந்தது. இது குறித்து அறிந்ததும் மாவட்டவருவாய்த் துறை அதிகாரிகள் உடனடியாக வில்லூருக்கு விரைந்தனர்.
குழந்தைகளைப் புதைத்து எடுக்கும் குழிமாத்து நிகழ்ச்சிக்குத் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது என்றும், அதைமீறினால் சிறையில் அடைத்து விடுவார்கள் என்றும், இந்த நிகழ்ச்சியால் அமைச்சர் துரைராஜின் பதவி பறிபோனதுகுறித்தும் எடுத்துக் கூறினார்கள்.
இதையடுத்து கிராமத்து மக்கள் முகத்தில் பயம் உருவானது. உடனடியாக கூடிப் பேசிய அவர்கள் குழிமாத்துநிகழ்ச்சியைக் கைவிடுவது என்றும் அதற்குப் பதிலாக குழந்தைகளைக் கோவில் பூசாரி தாண்டி நேர்த்திக் கடனைநிறைவேற்றுவது என்றும் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து குழிக்குள் புதைபடுவதற்காகக் காத்திருந்த 130 குழந்தைகளையும், தரையில் வேப்பிலைகளைப்பரப்பி அதில் படுக்க வைத்தனர்.
பின்னர் கோவில் பூசாரி அவர்களைத் தாண்டிச் சென்றார். இவ்வாறு பக்தர்களின் நேர்த்திக் கடன் பூர்த்திசெய்யப்பட்டது.
இருப்பினும் குழிக்குள் குழந்தைகளைப் புதைத்து எடுக்க முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் அந்தக் கிராமத்துமக்கள் முகங்களில் தெரிந்தது.
-->


