For Daily Alerts
Just In
திங்கள்கிழமை ஜெ.வை சந்திக்க கர்நாடக அமைச்சர்கள் வருகை
சென்னை:
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து உதவி கோரவும்விவாதிக்கவும் கர்நாடக அமைச்சர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சந்திரசேகர் ஆகியோர் திங்கள்கிழமைசென்னை வருகிறார்கள்.
நாகப்பாவை மீட்க தமிழக அரசின் உதவியை கர்நாடகம் கோரியது. இதுதொடர்பாக அம் மாநில தலைமைச்செயலாளர் ரவீந்திரா முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் கார்கேவும், சந்திரசேகரும் முதல்வரைப்பார்த்துபேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கர்நாடக அமைச்சர்களைச் சந்திக்கத் தயார் என்றும் அவர்களுக்கு திங்கள்கிழமை நேரம்ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனால் கர்நாடக அமைச்சர்கள், அதிகாரிகள் குழு திங்கள்கிழமை சென்னை வருகின்றனர்.
-->


