For Daily Alerts
Just In
அஞ்சல் வழி சட்டக் கல்வி: தமிழகத்தில் அறிமுகம்
சென்னை:
தமிழகத்தில் அஞ்சல் வழி சட்டக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இந்தஅஞ்சல் வழிக் கல்வித் திட்டத்தை தொடங்கவுள்ளது.
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில், தரம் உயர்த்தப்பட்ட ஐந்தாண்டு பி.எல்.ஹானர்ஸ் பட்டப் படிப்புஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கான சிறப்பு சட்டப் பள்ளியை துவக்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா இதனைத்தெரிவித்தார்.
சட்டக் கல்வி தொடர்பான டிப்ளமோ கோர்ஸ் ஒன்றையும் பல்கலைக்கழகம் தொடங்கும் என ஜெயலலிதா கூறினார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆதிசேஷன், சட்ட அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-->


