For Daily Alerts
Just In
நெய்வேலியில் ரூ.1,060 கோடி செலவில் புதிய அனல் மின் நிலையம்
சென்னை:
நெய்வேலி அனல் மின் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையம் அடுத்த மாதம் முதல்செயல்படும் என்று நெய்வேலி அனல் மின் கழகத்தின் தலைவர் ஜெயராமன் தெரிவித்தார்.
நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில்,
ரூ.1,060 கோடி செலவில் இந்தப் புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தலா 210 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரத்தைத் தயாரிக்கவல்ல 2 மின் பிரிவுகள் இங்குஅமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திரம் தவிர பிற தென் மாநிலங்கள் அனைத்திற்கும் இங்கிருந்து மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும்.
அடுத்த மாதம் இந்தப் புதிய மின் நிலையம் செயல்படத் தொடங்கும் என்றார் ஜெயராமன்.
-->


