3 தலித்களை படுகொலை செய்த இளைஞருக்கு 6 ஆயுள் தண்டனை!
கடலூர்:
3 தலித் மக்களைக் கழுத்தை வெட்டி படுகொலை செய்த இளைஞருக்கு 6 ஆயுள் தண்டனையும், ரூ.18,000அபராதமும் விதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.
இவர் கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் அங்குள்ள மரத்தடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த தலித்சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேரின் கழுத்தைத் துண்டித்து படுகொலை செய்தார்.
இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதையடுத்து கார்த்திகேயன்கைது செய்யப்பட்டார்.
கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் அவர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்றுகாலை தீர்ப்பு வழங்கப்பட்டது.
துடிக்கத் துடிக்க மூன்று பேரைப் படுகொலை செய்த கார்த்திகேயன் மிகவும் இளைய வயதினராக இருப்பதால்தூக்குத் தண்டனைக்குப் பதில் மூன்று ஆயுள் தண்டனைகளை விதிப்பதாகவும், கொல்லப்பட்டவர்கள்தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் மூன்று ஆயுள் தண்டனைவிதிப்பதாகவும் நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்.
கார்த்திகேயன் ஏக காலத்தில் இந்த ஆயுள் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.இது தவிர அவருக்கு ரூ.18,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பையொட்டி கடலூர் நீதிமன்றம், புளியங்குடி கிராமத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-->


