For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 20 பயங்கரவாதிகள் ஊடுருவல்: இதுவரை 10 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தின் முக்கிய கோவில்களைத் தகர்ப்பதற்காக சதி செய்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில்மேலும் 8 தீவிரவாதிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களைத் தவிர தமிழகத்தில் ஊடுருவியுள்ளமேலும் 12 பயங்கரவாதிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னையில் கடந்த வாரம் இரண்டு தீவிரவாதிகளைப் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர்.இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்து பிரமுகர் ஒருவரின் கொலை வழக்கில்இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் குடியாத்தம் அருகே தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒரு ஆசிரியரையும் போலீசார்கைது செய்தனர்.

இவர்கள் தமிழகத்தில் பெரும் நாசவேலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள், கம்ப்யூட்டர்கள், நவீன கருவிகள்ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுவரை 10 தீவிரவாதிகள் கைது:

இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் மேலும் இரண்டு தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளதாகப் போலீஸ்வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் பெயர் காசிம் மற்றும் அப்துல்லா என்று தெரிய வந்துள்ளது. சென்னையின்புறநகர் பகுதியான கொடுங்கையூரில் போலீசார் இவர்களைக் கைது செய்தனர்.

அனைத்து தீவிரவாதிகளும் இலங்கைக்குச் சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் பாகிஸ்தானுக்குச்சென்று பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் போலீசார்மேற்கொண்ட சோதனையில் ஐந்து தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மூட்டை மூட்டையாகவெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் உடனடியாக சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 10தீவிரவாதிகளைத் தமிழகப் போலீசார் கைது செய்துள்ளனர்.

20 தீவிரவாதிகள் ஊடுருவல்:

தமிழகத்தில் பயங்கரத் தாக்குதல்களை நடத்துவதற்காக ஒன்பது இடங்களில் மொத்தம் 20 தீவிரவாதிகள் வரைஊடுருவியதாகத் தெரிய வந்துள்ளது. கைதான தீவிரவாதிகளைப் போலீசார் நன்கு "கவனித்ததில்" இந்தவிவரங்கள் தெரிய வந்தன.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்துப் போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஒளிந்து கொண்டிருக்கும்12 தீவிரவாதிகளையும் வேட்டையாடுவதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் மாறு வேடங்களில் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

மத்திய உளவுத் துறையான "ரா" அமைப்பு எச்சரிக்கை செய்த பின்னரே தமிழகப் போலீசார் இந்தத் தீவிரவாதிகளைவேட்டையாடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

"இஸ்லாமிய பாதுகாப்புப் படை" என்ற பெயர் கொண்ட அமைப்பின் மூலம் தான் இந்தத் தீவிரவாதிகள் இயங்கிவருவதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் தடை செய்யப்பட்ட "சிமி" இயக்கத்தினருடனும் கூடஇவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் ஆந்திராவின் சாய்பாபா கோவிலில் சமீபத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் தொடர்புடையதீவிரவாதிகளுக்கும் இந்த பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கோவில்களை தகர்க்க சதி:

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி தமிழகத்தின் முக்கியக் கோவில்களைத் தகர்ப்பதற்காகவே இந்தத்தீவிரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளனர்.

அந்தத் தேதியும் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும், விமான, ரயில் மற்றும்பஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில்,பழனி தண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களும், பூசாரிகளும் கடும் சோதனைக்குப் பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சர்க்யூட்கேமராக்கள் மூலம் பக்தர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.

பழனி கோவிலில் ரூ.8 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.இந்தக் கேமராக்களின் மூலம் 1,000 அடி தூரத்தில் வருபவரைக் கூட துல்லியமாகக் கண்காணிக்க முடியும். 24மணி நேரமும் இந்தக் கேமராக்கள் இயங்கும்.

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு:

ரயில் நிலையங்களில் எப்போதுமே இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரகசியகேமராக்கள் மூலம் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

அனைத்து ரயில் பயணிகளும் மெட்டல் டிடெக்டர் மூலம் கடுமையாகச் சோதிக்கப்படுகின்றனர். ரயில்களில்வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அனைத்து ரயில்களிலும் ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ரகசியபோலீசார் சாதாரண உடைகளிலும் கோவில்கள் மற்றும் ரயில்களில் கண்காணித்து வருகின்றனர்.

தமிழக கோவில்களை தகர்க்க பயங்கர சதி: 3 தீவிரவாதிகள் கைது

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X