போலீஸ் வயர்லஸ் டவரில் பிணமாக தொங்கிய பெண்
பரமக்குடி:
பரமக்குடியில் போலீஸாரால் விசாரணைக்காக கொண்டு வரப்பட்ட பெண் அங்கிருந்த வயர்லஸ் டவரில் தூக்கில்தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
பரமக்குடி அருகே உள்ள காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்தவர் கருப்பி. இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும்ஆசிரியர் ஒருவர், தன் வீட்டிலிருந்து 50 பவுன் நகைகளைக் காணவில்லை என்று பரமக்குடி போலீஸில் புகார்கொடுத்திருந்தார்.
இதையடுத்து விசாரணைக்காக கருப்பியை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள வயர்லஸ் டவரில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக்காணப்பட்டார் கருப்பி. உடனடியாக அவருடைய உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டுசென்றனர்.
தகவல் அறிந்ததும் கருப்பியின் உறவினர்களும் பொதுமக்களும் காவல் நிலையம் முன்பு கூடினர். கருப்பி சாவில்மர்மம் இருப்பதாகக் கூறி அவர்கள் போலீசாருக்கு எதிராகக் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அஜிஸ் சாட்டர்ஜி, எஸ்.பி. அசோக் குமார் தாஸ் ஆகியோர்விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் கருப்பியின் உறவினர்களிடம் சமாதானம் பேசிக் கலையச் செய்தனர்.
கருப்பியின் சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->


