ஜெ. தொகுதியில் ரூ.13 லட்சம் செலவில் மழை நீர் கால்வாய்
ஆண்டிப்பட்டி:
முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மழை நீரை சேமிப்பதற்காக ரூ.13 லட்சம் செலவில்மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறுநடவடிக்கைகளை அரசு, தனியார் அமைப்புகளும் செய்து வருகின்றன.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் மழை நீர்கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.13 லட்சம் செலவில் பல கி.மீ. தொலைவிற்கு இந்தக் கால்வாய்ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் கிடைக்கும் மழை நீர் இந்த கால்வாய் மூலம் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. இதற்காககால்வாயில் மொத்தம் மூன்று இடங்களில் 45 அடி ஆழ ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கால்வாய் வழியாக வரும் மழை நீர் இந்த கிணறுகள் மூலம் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிகஅளவில் மழை நீர் சேமிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-->


