நாகப்பாவை கொன்றது வீரப்பன் தான்: ஜெயலலிதா புகார்
சென்னை:
வீரப்பனுக்கும், தமிழ்நாடு அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை எதுவும் நடக்கவில்லை.அந்த சண்டையில் தான் நாகப்பா படுகாயமடைந்து இறந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தங்களுக்கும் தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 அதிரடிப்படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அதில் தானும், சேத்துக்குழி கோவிந்தன், நாகப்பா ஆகியோர்காயமடைந்ததாகவும், வீரப்பன் தனது 6வது கேசட்டில் கூறியிருந்தான்.
இந்த கூற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா முழுமையாக மறுத்துள்ளார். நாகப்பாவின் மரண செய்தியைஅறிந்ததும் அவர் வெளியிட்ட அறிக்கை:
நாகப்பா மரணச் செய்தி என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்தஇரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேசட்டில் கூறப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும், தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கும் எதிராக செயல்படும் சில சக்திகள்இந்த பொய்யான வதந்தியைப் பரப்பி விட்டுள்ளன.
தமிழக அதிரடிப்படை கர்நாடக காட்டுப் பகுதிக்குள் செல்ல வாய்ப்பே இல்லை. கர்நாடக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க கடந்த ஒரு மாதமாக தமிழக அதிரடிப்படை கர்நாடக காட்டுப் பகுதியில் தனது வேட்டையைநிறுத்தி வைத்துள்ளது.
நாகப்பா இறந்து கிடந்த இடம் கர்நாடகப் பகுதியில் 40கிலோமீட்டர் உள்பகுதியில் உள்ளது.
வீரப்பன் தொடர்ந்து கர்நாடக காட்டுப் பகுதியில்தான் இருந்து வருகிறான். தமிழக அதிரடிப்படையும் கர்நாடககாட்டுக்குள் செல்வதில்லை. இந் நிலையில் தமிழக அதிரடிப்படைக்கும், வீரப்பன் கும்பலுக்கும் இடையே எப்படிசண்டை நடந்திருக்க முடியும்?.
கடந்த மாதம் 18ம் தேதி என்னை வந்து சந்தித்த கர்நாடக அமைச்சர்கள் குழுவிடம், கர்நாடகம் கோரிக்கைவைத்தால், கூட்டு நடவடிக்கையைத் தொடங்க தமிழகம் தயாராக உள்ளது.
மேலும், நாகப்பாவை மீட்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாகஉறுதி தந்தேன் என நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஆனால், நாகப்பாவின் உயிர் குறித்து கர்நாடக அரசு பயந்ததால், கூட்டு நடவடிக்கைக்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நாகப்பாவின் முடிவு அமைந்து விட்டது.
நாகப்பான் மறைவையடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லியிலிருந்து நேற்றிரவு என்னுடன்தொலைபேசியில் பேசினார். அப்போது வீரப்பனைப் பிடிக்க இரு மாநில அதிரடிப்படையினரும் உடனடியாககூட்டு நடவடிக்கையில் இறங்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
தமிழக அதிரடிப்படை வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் எப்போதுமே முனைப்புடன் உள்ளது. நாகப்பா மரணச்செய்தி வந்ததுமே, டிஜிபி நெய்ல்வால், அதிரடிப்படை தலைவர் வால்டர் தேவாரம் ஆகியோருக்கு உரியஉத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன.
உடனடியாக தேடுதல் வேட்டை தொடங்கி விட்டோம். கர்நாடக அதிரடிப்படை உயர் அதிகாரிகளுடன் சேர்ந்துபேசி, கூட்டு நடவடிக்கையைத் தொடங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
வீரப்பனுக்கு எதிரான உறுதியான, இறுதியான தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->


