நாகப்பாவை விட்டுவிட்டேன்: முன்னதாக வீரப்பன் விட்ட புருடா
சத்தியமங்கலம்:
நாகப்பா விவகாரத்தில் நேற்று மாலை அவரது உடல் மீட்கப்படும் வரை பெரும் குழப்பம் நிலவியது.
நள்ளிரவில் வந்த 6வது கேசட்:
வீரப்பனிடம் இருந்து சனிக்கிழமை நள்ளிரவு 6வது கேசட் வந்தது. கொள்ளேகால் தாலுகா காமகெரேயில் உள்ள நாகப்பாவின் பண்ணைவீட்டின் உள்ளே இந்த கேசட் எறியப்பட்டது.
அதில் பேசியுள்ள வீரப்பன், தமிழக அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தியதில் நாகப்பா காயமடைந்துவிட்டார். இதனால் அவரை நான்வியாழக்கிழமையே காட்டுப் பகுதியில் விட்டுவிட்டேன். இப்போது அவர் எனது கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறியிருந்தான்.
வீரப்பனும் காயம்:
இத் தாக்குதலில் நானும் (வீரப்பன்), சேத்துக்குளியானும் காயமடைந்துவிட்டோம் என்றும் கூறியிருந்தான்.
2 தமிழக வீரர்கள் சாவு:
மேலும் தங்களுடன் நடந்த நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக அதிரடிப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் இறந்துவிட்டதாகவும் வீரப்பன்கூறியிருந்தான்.
கர்நாடக அமைச்சர் மெளனம்:
ஆனால், கேசட்டில் உள்ள விவரம் குறித்து கர்நாடக அரசு தகவல் ஏதும் தர மறுத்தது.
அந்த கேசட் இன்னும் தனது கைக்கு வர வில்லை என உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். ஆனால், வீரப்பன் குறித்தபுதிய தகவல்களைக் கேட்டு நாகப்பான் மருமகன் கிரண் படேல் பெங்களூர் வந்தார். அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயைச் சந்தித்தார்.
இதன் பின்னர் கார்கேயின் வீட்டில் இருந்து வெளியே வந்த கிரண் படேல், நாகப்பா காயமடைந்துவிட்டதால் அவரை காட்டுப்பகுதியிலேயே விட்டுவிட்டதாக அந்த கேசட்டில் வீரப்பன் கூறியிருக்கிறான் என்றார்.
அதற்கு மேல் விவரம் எதையும் அவர் பேசவில்லை. உடனே அவரை போலீசார் காரில் ஏற்றி அழைத்துச் சென்றுவிட்டனர்.
அவசரக் கூட்டம்:
இதையடுத்து கார்கேயின் இல்லத்தில் இன்று கர்நாடக டி.ஜி.பி., முதல்வரின் பாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசுலு மற்றும் உளவுப் பிரிவுஅதிகாரிகள் அவசரமாகக் கூடினர். தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
எந்த விவரத்தையும் வெளியிட அதிகாரிகளும் அமைச்சரும் மறுத்ததால் நிருபர்கள் கார்யிேன் வீட்டின் வெளியே பெரும் எண்ணிக்கையில்காத்துக் கொண்டிருந்தனர்.
கர்நாடக அதிரடிப்படை நுழைந்தது:
இந் நிலையில் காயமடைந்த நாகப்பாவை மீட்க கர்நாடக அதிரடிப்படை காட்டுக்குள் பிற்பகலில் அனுப்பப்பட்டது. கடந்த 2 மாதங்களாககாட்டுப் பகுதியில் இருந்து வாபஸ் பெறப்பட்ட கர்நாடக அதிரடிப்படை நேற்று தான் மீண்டும் காட்டுக்குள் நுழைந்தது.
மேலும் நாகப்பாவின் சொந்த ஊரான காமகெரயிேல் இருந்தும் சுமார் 2,000 பேர் காட்டுக்குள் புகுந்தனர்.
நாகப்பா உடல் மீட்பு:
இதனிடையே கர்நாடக காட்டுப் பகுதியின் உள்ளே சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் செங்கடி என்ற இடத்தில் நாகப்பாவின் உடல்மீட்கப்பட்டது.
தேவாரம் மறுப்பு:
ஆனால், வீரப்பன் கும்பலுடன் என்கெளண்டர் ஏதும் நடக்கவில்லை என தமிழக அதிரடிப்படை கூறியுள்ளது. அதிரடிப் படையின் தலைவர்தேவாராம் சத்தியமங்கலத்தில் இருந்து என்.டி.டி.டிவிக்கு தொலைபேசியில் அளித்த பேட்டியில்,
தமிழக அதிரடிப் படைக்கும் வீரப்பன் கும்பலுக்கும் இடையே சமீபத்தில் எந்தவிதமான துப்பாக்கிச் சண்டையும் நடக்கவில்லை. அவன்இப்போது கர்நாடக காட்டுப் பகுதியில் தான் பதுங்கியிருக்கிறான். ஆனால், அவர்களது எல்லையில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டாம்என்று கூறிவிட்டார்கள். இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழக அதிரடிப் படையினர் தமிழக எல்லையில் தான் உள்ளனர்.
கர்நாடக வன எல்லையில் நுழையவில்லை. வீரப்பனுடன் எந்த எண்கெளன்டரிலும் ஈடுபடவில்லை. இப்போது வீரப்பனிடம் இருந்துவந்துள்ள கேசட்டில் கூறப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது என்றார்.
-->


