கர்நாடகத்தில் வன்முறை: அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடல்- தமிழக லாரி எரிப்பு, பஸ்கள் மீது தாக்குதல்
பெங்களூர்:
நாகப்பா கொல்லப்பட்டதையடுத்து இன்று கர்நாடகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
சாம்ராஜ்நகரில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது. நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் டயர்களைப் போட்டு எரித்தும், பாறைகளைவைத்தும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்றிரவே கொள்ளேகால், ஹானூர் போன்ற பகுதிகளில் வன்முறை வெடித்தது. நாகப்பாவின் சொந்த ஊரான காமகெரேயில் தமிழகத்தைச்சேர்ந்த ஒரு லாரி எரிக்கப்பட்டது. 3 கர்நாடக அரசு பஸ்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடந்தது. மேலும் 2 கார்களும் தீ வைத்துஎரிக்கப்பட்டன. அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 2 போலீசாரை ஒரு கும்பல் தாக்கியது. பின்னர் அவர்களை உயிரோடு எரிக்கவும்முயற்சி நடந்தது.
ஆனால், விரைந்து வந்த ஆயுதப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அக் கும்பலை கலைத்தனர். பின்னர் போலீசாரை எரிக்கமுயன்ற கும்பல் மாது நூற்றுக்கணக்கான போலீசார் தடியடி நடத்தினர். இதையும் மீறி கும்பல் தொடர்ந்து வன்முறையில் இறங்கியதால்போலீசார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
நாகப்பாவின் வீட்டில் செய்தி சேகரிக்க நின்றிருந்த நிருபர்களையும் வன்முறைக் கும்பல் விடவில்லை. தனியார் டிவி நிறுவனத்தின்கேமராவை அக் கும்பல் அடித்து நொறுக்கியது. இத் தாக்குதல் 6 நிருபர்கள் காயமடைந்தனர்.
இதற்கிடையே கோயம்புத்தூரில் இருந்து மைசூர் சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பஸ் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் கல் வீச்சுக்குஉள்ளானது. இதில் சில தமிழர்கள் காயமடைந்தனர். அதே போல மைசூர் சென்ற ஒரு தமிழக பதிவு எண் கொண்ட காரும் சத்தியமங்கலம்அருதே தாக்கப்பட்டது.
ராமபுரா காவல் நிலையத்தின் மீதும் கல் வீச்சு நடந்தது. அந் நகர சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. கடைகளும் அடித்துநொறுக்கப்பட்டன.
இதையடுத்து மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு குறித்து விவாதித்த மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் இன்று கல்லூரிகளையும்பள்ளிகளையும் மூடிவிட முடிவு செய்தனர்.
மேலும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கவும் முதல்வர் கிருஷ்ணா டெல்லியில் இருந்து உத்தரவிட்டார்.
ஆனால், சிமோகா, கொள்ளேகால், மைசூர், ராம்புரா, மாண்டியா ஆகிய இடங்களில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து இந்தஇடங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து பெங்களுரில் இன்று காலை 6 மணி முதல் வரும் 10ம் தேதி நள்ளிவரவு வரை போலீசார் 144வது தடையுத்தரவைஅமல்படுத்தியுள்ளனர். பெங்களூரில் பதற்றமான இடங்களில் பஸ் போக்குவரத்தையும் மாநகர போக்குவரத்துக் கழகம் நிறுத்திவிட்டது.
கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பதற்றம் நிறைந்த இடங்களில் கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினரும், ஆயுதப் படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறையில் இறங்குபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேஎச்சரித்துள்ளார்.
-->


