"காஞ்சி மடத்தை முற்றுகையிடுவோம்": கிருஷ்ணசாமி எச்சரிக்கை
சென்னை:
தலித்துகளுக்கு எதிராகப் பேசி வருவதை காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் உடனடியாகநிறுத்திக் கொள்ளவில்லை என்றால் அவருடைய மடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் இது தொடர்பாக நிருபர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,
தலித்துகளைக் கேவலப்படுத்தும் வகையில் காஞ்சி சங்கராச்சாரியார் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால்தலித்துகளாகிய நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம்.
தலித்துகளுக்கு எதிராகப் பேசுவது, அறிக்கை விடுவது அனைத்தும் பொதுமக்கள் உரிமைகள் சட்டம் 1989-ன் படிதண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும்.
இது தொடர்பாக தலித் மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி சங்கராச்சாரியாருக்குஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். மறுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்கப் போவதில்லைஎன்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளேன்.
தலித்துகளுக்கு எதிராகப் பேசுவதை காஞ்சி சங்கராச்சாரியார் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் காஞ்சி மடம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பிராமணர்களுக்குத் தனியாகவும் மற்ற ஜாதியினருக்குத்தனியாகவும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
இதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு வரும் ஜனவரி 26ம் தேதிகாஞ்சி மடத்தை முற்றுகையிட்டு பெரும் போராட்டம் நடத்துவோம் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
மேலும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து வரும் 30ம் தேதிஅனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு முன்பாகவும் புதிய தமிழகம் தொண்டர்கள் போராட்டம்நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-->


