நடிகர் வி.கே. ராமசாமியின் உடல் தகனம்
சென்னை:
நேற்று மரணமடைந்த நடிகர் வி.கே. ராமசாமியின் உடல் சென்னையில் இன்று தகனம் செய்யப்பட்டது.
ராமசாமியின் இறுதிச் சடங்குகள் இன்று நடந்தன. நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார்,நெப்போலியன், ராதாரவி, எஸ்.எஸ். சந்திரன், நடிகைகள் மனோரமா, காந்திமதி உள்ளிட்டோர் இறுதி மரியாதைசெலுத்தினார்கள்.
பின்னர் சென்னை-தி. நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து கண்ணம்மாப் பேட்டை சுடுகாட்டுக்கு இறுதிஊர்வலம் கிளம்பியது.
இந்த இறுதி ஊர்வலத்திற்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள்ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.
சுடுகாட்டில் நடந்த இறுதிச் சடங்குகளின் இறுதியில் சிதைக்கு ராமசாமியின் மூத்த மகன் வி.கே. ரகுநாத் தீமூட்டினார்.
இறுதி ஊர்வலத்தையொட்டி, இன்று பிற்பகல் 2 மணி வரை சினிமா படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படம்தொடர்பான அனைத்துப் பணிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. நேற்றும் வி.கே.ஆர். இறந்த பின்னர்மதியத்திலிருந்து எந்தவிதமான சினிமா ஷூட்டிங்கும் நடக்கவில்லை.
இன்றைய இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்குப் பின் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கூறுகையில், சீனியர் நடிகர்ஒருவரை இழந்துள்ளோம். நடிகர் சங்கத்திற்காக நிறைய உழைத்துள்ளார் வி.கே.ஆர். நடிகர் சங்கக் கட்டடத்தைசிவாஜி கணேசனுடன் சேர்ந்து கட்டியவர் அவர். அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படும்என்றார்.
முன்னதாக, நேற்று முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் கே.கே. பாலசுப்ரமணியம் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தந்தி அனுப்பியிருந்தார். சத்யராஜ், பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
-->


