For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெவுக்கு எதிராக காங். முதல்வர்கள் கூட்டு: காவிரி ஆணையக் கூட்டம் நடக்குமா?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வரும் 13ம் தேதி திட்டமிட்டபடி காவிரி ஆணையக் கூட்டம் நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீர் இல்லாமல் குறுவையைத் தொடர்ந்து, சம்பா பயிர்களும் கருக ஆரம்பித்துட்டதால் உடனே காவிரி ஆணையத்தைக் கூட்டிகாவிரியில் நீர் விட வழி செய்ய வேண்டும் என பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வரும் 13ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம் நடக்கும் என வாஜ்பாய் அறிவித்தார். குறைந்தபட்சம் 3 மாநிலமுதல்வர்காளாவது நடந்து கொண்டால் தான் இக் கூட்டத்தை நடத்த முடியும்.

ஆனால், 13ம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமே பிரதமர் அலுவலகத்திடம் உறுதிஅளித்துள்ளார். கர்நாடக, கேரள, பாண்டிசேரி மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் முதல்வர்கள் இன்னும் உறுதி மொழி ஏதும் தரவில்லை.

இதனால் இக் கூட்டம் நடக்குமா என்பதே சந்தேகத்துக்குறியதாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி காவிரி ஆணையக் கூட்டததை பிரதமர் வாஜ்பாய் கூட்டியபோது கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும்,பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும் டெல்லி சென்றனர்.

ஆனால், ஜெயலலிதா கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்தார். காவிரி விவகாரத்தை நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்எனவும் ஆணையக் கூட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் கூறி பிரதமரை விமர்சித்து ஒரு கடிதமும் அனுப்பினார்ஜெயலலிதா.

ஆனால், ஜெயலலிதாவின் இச் செயலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. முதலில் பிரதமரிடம் மன்னிப்பு கேட்டு காவிரிஆணையத்தை மதித்து நடக்க ஜெயலலிதா கற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

இதனால், காவிரி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்கத் தயார் என்றும் உடனே கூட்டத்தைக் கூட்டுமாறும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.ஆனால், இழுத்தடிப்புகளுக்குப் பின் வரும் 13ம் தேதி கூட்டத்தை நடத்த மத்திய அரசு முன் வந்தது.

ஆனால், தங்கள் கட்சியின் தலைவி சோனியா காந்தியை தொடர்ந்து விமர்சித்து வரும் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டும் வகையிலும்,கடந்தமுறை தங்களை டெல்லியில் காக்க வைத்து கழுத்தறுத்த ஜெயலலிதாவுக்கு பதிலடியாகவும் காவிரி ஆணையக் கூட்டத்தில்ஒட்டுமொத்தமாக பங்கேற்பதில்லை என்ற முடிவுக்கு கர்நாடக, கேரள, பாண்டிச்சேரி முதல்வர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவர்கள் வராவிட்டால் காவிரி ஆணையக் கூட்டத்தை நடத்த முடியாமல் போகும்.

ஜெயலலிதா- காங்கிரஸ் முதல்வர்களின் அரசியல் மோதலால் கடைசியில் பாதிக்கப்படப் போவது அப்பாவி விவசாயிகள் தான்.

இந் நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் விட முடியாது என கர்நாடக முதல்வர் கிருஷ்ணாபிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு எப்படியாவது பிரதமர் நீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என தமிழகவிவசாயத்துறை அமைச்சர் ஜீவானந்தம் கூறியுள்ளார். தர்மபுரியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், காவிரி ஆணையத்தைக் கூட்டிதமிழகத்துக்கு நீர் கிடைக்கச் செயய பிரதமர் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றார்.

காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக நாளைக்குள் இந்த மூன்று மாநில முதல்வர்களும் தெரிவித்தால் தான் திட்டமிட்டபடிகூடடம் நடக்கும்.

இதற்கிடையே நதிகள் இணைப்புக்கு அனைத்து மாநிலங்களுக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி அப்துல் கலாம்கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் அனைத்து மாநில கவர்னர்கள் மாநாட்டில் பேசிய அவர் நதிகளை இணைக்கும் விஷயத்தில்அனைத்து மாநிலங்களும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X