"விண்டோஸ் ரகசிய குறியீடு": ரஷ்யாவுக்கு மைக்ரோசாப்ட் வழங்கியது
மாஸ்கோ:
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய "விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட"த்தின் ரகசியக் குறியீடுகளை (secret code)ரஷ்யாவுக்குக் கொடுத்துள்ளது. இதன்மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ்" ரகசியக் குறியீட்டைப்பெறும் முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரும் கம்ப்யூட்டர் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் சாப்ட்வேரின்தன்னுடைய ரகசியக் குறியீட்டை இதுவரை யாருக்கும் கொடுத்தது இல்லை. இதனால் மைக்ரோசாப்ட்விண்டோசில் வேறு யாராலும் மாறுதல்களைச் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
ஆனால், இப்போது லைனக்ஸ் சாப்வேரிடமிருந்து இருந்து பெரும் சவாலை சந்திக்க ஆரம்பித்துள்ளமைக்ரோசாப்ட். லைனக்ஸ் சாப்ட்வேரை வாங்குபவர்களுக்கு ஓபன் சோர்ஸ் என்ற பெயரில் எல்லா குறியீடுகளும்வழங்கப்படுகின்றன. இதனால் அந்தந்த நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய வகையில் லைனக்ஸை மாற்றிஎழுதிக் கொள்ள முடியும்.
இதனால் மைக்ரோசாப்ட்டை விட்டுவிட்டு லைனஸ்சுக்கு பல முன்னணி நிறுவனங்கள் தாவி வருகின்றன. இந்தகடும் போட்டி காரணமாக தனது நிலையில் இருந்து மைக்ரோசாப்ட் இறங்கி வந்துள்ளது.
உலகெங்கிலும் பிரபலமாகியுள்ள தன்னுடைய "விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட"த்தின் ரகசியக் குறியீடுகளைரஷ்யாவுக்கு மைக்ரோசாப்ட் கொடுத்துள்ளது. இதனால் விண்டோஸை ரஷ்யாவால் தனக்கு வேண்டிய விதத்தில்மாற்றிக் கொள்ள முடியும்.
விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்.பி., விண்டோஸ் சி.ஈ. மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 ஆகியவற்றின்ரகசியக் குறியீடுகளைத்தான் ரஷ்யாவுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. ரஷ்ய அரசுக்குச் சொந்தமானதகவல் தொழில்நுட்ப நிறுவனமான "அட்லஸ்" இந்தக் குறியீடுகளைப் பெற்றுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான புதிய வகை சாப்ட்வேர்களை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. விண்டோஸைஅடிப்படையாக வைத்து இதை உருவாக்க உள்ளது ரஷ்யா. இதற்காகத் தான் ஓபன் சோர்ஸ் கோட்களைமைக்ரோசாப்டிடம் கேட்டு வாங்கியுள்ளது.
அதே போல இந்தியாவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் தனது விண்டோஸ் சாப்ட்வேரின் சோர்ஸ்கோட்களை வழங்க மைக்ரோசாப்ட் முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தவிர மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் சாப்ட்வேர் மீது ரஷ்யாவுக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து வந்ததுஉண்டு. விண்டோஸ் மூலம் தனது நாட்டின் ரகசிய திட்டங்களை அமெரிக்கா உளவு பார்க்க முடியும் என ரஷ்யாநினைக்கிறது. இதனால் கடந்த 2000ம் ஆண்டில் ரஷ்யாவின் அனைத்து ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தஅலுவலகங்களிலும் கம்ப்யூட்டர்களில் விண்டோஸைப் பயன்படுத்த அதிபர் புடின் தடை விதித்தார்.
ரஷ்யாவின் இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையிலும் தனது சோர்ஸ் கோட்களை வழங்க மைக்ரோசாப்ட் முன்வந்துள்ளது. இப்போது அதை தனது வசதிக்கு ரஷ்யா மாற்றி எழுதும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications