கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார் "பத்மஸ்ரீ" வைரமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
"பத்மஸ்ரீ" விருது பெற்றுள்ள கவியரசு வைரமுத்து திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
வைரமுத்து, பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் "பத்மஸ்ரீ"விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் குறித்து கருணாநிதியை நேரில் சந்தித்து வைரமுத்து தெரிவித்தார்.
அப்போது அவரைக் கருணாநிதி பாராட்டி, வாழ்த்தி, தன்னுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட வைரமுத்து, அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஆசியும் பெற்றார்.












Click it and Unblock the Notifications