• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணிந்தார் ஜெ.: விவசாயிகளுக்கு உணவுக்கு பதில் அரிசி வழங்க முடிவு

By Staff
|

சென்னை:

விவசாயிகளுக்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மதிய உணவுத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புகள்எழுந்துள்ளதையடுத்து அத் திட்டத்தைக் கைவிட முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

இலவச உணவுக்குப் பதிலாக விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 30 கிலோ இலவச அரிசி வழங்க அவர் முடிவுசெய்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏழை விவசாயிகளுக்குஇலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், விவசாயிகள் இடையேஇதற்கு போதிய வரவேற்பு இல்லை.

பொங்கல் தினமான கடந்த 15ம் தேதி முதல் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை பெரும்பாலான விவசாயிகள் புறக்கணித்துவிட்டனர்.

பிச்சைக்காரர்கள் மாதிரி தட்டை ஏந்திக் கொண்டு வந்து நிற்க மாட்டோம் என்று கூறிவிட்ட அவர்கள்நத்தையையும் நண்டுகளையும் சாப்பிட்டு வருகின்றனர்.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் கூப்பனைக் கொடுத்துவிட்டு உணவு தராமல் பல ஆயிரம் விவசாயிகளைஅலைகழித்து வந்தது அரசு. இதனால் கிராமப் புறங்களில் அதிமுக கரை வேட்டிகளைக் கண்டாலே அவர்களைமக்கள் தூற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களிடம் தங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிவிட்டதை தலைமைக்கு அதிமுக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இத் திட்டத்தை கைவிட ஜெயலலிதா முடிவு செய்தார்.

இதையடுத்து இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு, அதற்குப் பதிலாக விவசாயிகளுக்குமாதந்தோறும் 30 கிலோ இலவச அரிசி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. சட்டசபையில் இன்று இதை அறிவித்த ஜெயலலிதா இலவசமதிய உணவுத் திட்டத்தில் பலன் பெற்றவர்கள் அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என்றார்.

கூடுதல் நிவாரணம் கேட்டார் ஜெ.:

இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக ரூ.2,027.53கோடி நிதியுதவியும், 9 லட்சம் டன் தானியங்களும் வழங்க வேண்டுமென்று மத்திய அரசிடம் ஜெயலலிதாகோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் இன்று அவர் பேசுகையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளபகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

அவர்கள் சென்னை திரும்பியதும் நான் அவர்களுடன் பேசவுள்ளேன். அப்போது தமிழக வறட்சி நிவாரணநடவடிக்கைகளுக்காக ரூ.2,027.53 கோடி நிதியும், 9 லட்சம் டன் தானியங்களும் வழங்க வேண்டும் என்றும்அவர்களிடம் கோரிக்கை விடுப்பேன் என்றார் ஜெயலலிதா.

அதன்படி தமிழக வறட்சிப் பகுதிகளைப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர் இன்று மாலை சென்னை வந்துசேர்ந்தனர். பின்னர் ஜெயலலிதாவை அவர்கள் சந்தித்துப் பேசினர்.

தாங்கள் பார்வையிட்ட பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றிப் போயுள்ளதாகவும், நீரின்றி ஏராளமானவிவசாயிகள் தவித்துக் கொண்டிருப்பதாகவும், பல கிராம மக்கள் குடிப்பதற்குக் கூட நீர் இல்லாமல் வாடிக்கொண்டிருப்பதாகவும் மத்தியக் குழுவினர் கூறினர்.

அப்போது, தமிழக வறட்சி நிலையைச் சமாளிப்பதற்காக ரூ.2,027.53 கோடி தொகையையும், 9 லட்சம் டன்தானியங்களையும் வழங்க வேண்டும் என்று மத்தியக் குழுவினரிடம் கேட்டுக் கொண்ட ஜெயலலிதா, இதுதொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

கடந்த 13ம் தேதி டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்த ஜெயலலிதா, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிநிலைமை காரணமாக ரூ.400 கோடி நிவாரணத் தொகையும், 2 லட்சம் டன் தானியங்களும் மத்திய அரசு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிவாரணத் தொகையையும், தேவையான தானியத்தின் அளவையும் அதிகரித்து ஜெயலலிதாகேட்டுள்ளார்.

விவசாயிகள் கதறல்:

முன்னதாக காவிரி டெல்டா பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்த மத்தியக் குழுவினரிடம் கருகிக் கிடக்கும்பயிர்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் காட்டி விவசாயிகள் கதறி அழுதனர்.

மத்திய வேளாண்மைத் துறை இணைச் செயலாளரான ஆஷிஷ் பகுகுணா தலைமையிலான மத்தியக் குழுவினர்தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்த மூன்று நாட்களாகப் பார்வையிட்டனர்.

நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட மத்தியக்குழுவினர், நேற்று காலை சேலம், ஈரோடு மாவட்டங்களைப் பார்வையிட்டனர்.

அப்போது பல கிராமத்தைச் சேர்ந்த மக்களும் காலிக் குடங்களுடன் குடிநீர் கேட்டு மத்தியக் குழுவினரைமுற்றுகையிட்டனர். சுமார் ஐந்து மாத காலமாக தாங்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதாகவும்அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் நேற்று மாலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக் குழுவினர்பார்வையிட்டனர்.

அப்போது தாங்கள் பயிரிட்டிருந்த சம்பா பயிர்கள் அனைத்தும் கருகிப் போயிருப்பதை விவசாயிகள் சுட்டிக்காட்டினர். கருகிப் போன பயிர்களைக் கையிலே ஏந்தி மத்தியக் குழுவினரிடம் காட்டி அவர்கள் கதறி அழுதனர்.

ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட தங்களுக்கு வழியில்லை என்று கூறிய விவசாயிகள், இந்நிலை தொடர்ந்துநீடித்தால் தாங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியேஇல்லை என்று உருக்கத்துடன் மத்தியக் குழுவினரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைமத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சென்னை திரும்பினர்.

நாளை டெல்லி திரும்பும் மத்தியக் குழுவினர் வாஜ்பாயிடம் விரிவான அறிக்கை ஒன்றை அளிப்பார்கள். அந்தஅறிக்கையைப் பொறுத்து தமிழகத்திற்குத் தேவையான வறட்சி நிவாரண உதவிகளை வாஜ்பாய் அறிவிப்பார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X