For Daily Alerts
Just In
சாத்தான்குளம் இடைத் தேர்தல்: காங்கிரசுக்கு மக்கள் தமிழ் தேசம் ஆதரவு
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தங்கள் கட்சி ஆதரவளிக்கும் என்று மக்கள் தமிழ் தேசம்கட்சியின் தலைவர் கண்ணப்பன் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் கண்ணப்பன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
சாத்தான் குளம் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எங்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் இதுதொடர்பாக எங்களுக்குக் கடிதமும் அளித்துள்ளனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு இந்த இடைத் தேர்தலில் ஆதரவளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியுடனும் மக்கள் தமிழ் தேசம் கட்சி இணையாது என்றார் கண்ணப்பன்.


