For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகங்கை அருகே எலிக்கறி சாப்பிடும் கிராம மக்கள்: மூடி மறைக்க அரசு முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகாபுரி கிராம மக்கள் எலிக்கறியை மட்டுமே சாப்பிட்டு வருகின்றனர். தமிழகவறட்சியால் ஏற்பட்ட இந்த அவலம் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சிவகங்கைக்கும் பரவியுள்ளது.

வேம்பத்தூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த நான்கு தலைமுறைகளாக கூலிவேலைதான் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அவர்களுக்குக் கூலி வேலை கிடைப்பது கூட அரிதாகிக்கொண்டே வருகிறது. அப்படிக் கிடைத்தாலும் அப்பணத்தைக் கொண்டு ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட அரிசிவாங்க முடியாத நிலை இந்தக் கிராமத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மதிய உணவுத் திட்டத்திலும் ஒரு சில விவசாயிகள் மட்டுமேசேர்ந்துள்ளனர். நேற்று முதல் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக மாதம் 30 கிலோ அரிசிவழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி குறிப்பிட்ட ஒரு சில விவசாயிகள் மட்டுமே அரிசி வாங்கிப் பயன்பெறுவார்கள். கிராமத்திலுள்ள மற்றமக்கள் அனைவருமே தினமும் வயலில் எலிகளை வேட்டையாடி அவற்றையே கறியாக்கிச் சாப்பிட்டுவருகின்றனர்.

கடந்த ஆண்டு குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலவிவசாயிகளும் தங்கள் பசியைப் போக்கிக் கொள்ள எலி, நத்தை ஆகியவற்றைக் கொன்று சாப்பிட்டு வந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திலும் தற்போது மக்கள் எலிக்கறி சாப்பிடும் அவலம்ஏற்பட்டுள்ளது.

ஆனால் இவ்விஷயத்தை மூடி மறைக்க உள்ளூர்பஞ்சாயத்து அதிகாரிகள் எவ்வளவோ முயற்சித்தனர். ஆனாலும்மாவட்ட கலெக்டருக்கு விஷயம் எட்டியது.

இதையடுத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் டாக்டர் சந்தோஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் அழகாபுரிகிராமத்திற்கு விரைந்து மக்களிடம் குறை கேட்டனர்.

உடனே மக்களும் கலெக்டரிடம் குமுறித் தீர்த்து விட்டனர். சாலை வசதி இல்லை, வீடு கட்ட பண வசதி இல்லை,தினமும் கூலி வேலை கூட கிடைப்பது அரிதாகி விட்டதால்தான் எலிக்கறியைச் சாப்பிட்டு வருகிறோம் என்றுமக்கள் கூறினர்.

"தயவு செய்து இனி எலிக்கறி சாப்பிடாதீர்கள்" என்று மக்களிடம் கலெக்டர் கெஞ்சாத குறையாகக் கெஞ்சி,விவசாயிகளுக்கு வழங்கப்படும் 30 கிலோ அரிசியை அனைவருக்கும் தர ஏற்பாடு செய்வதாக அவர்களிடம்உறுதி அளித்தார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X