For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெரீனா மீனவர் உரிமைக்காக இயக்கம் தொடங்கும் மேதா பட்கர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மீனவர்களின் குப்பங்களை அகற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதைஎதிர்த்து போராட்ட இயக்கம் தொடங்கப் போவதாக பிரபல சுற்றுச்சூழல் இயக்கவாதியான மேதா பட்கர்அறிவித்துள்ளார்.

குஜராத் மாநலத்தில் நர்மதா நதி நீர்த் திட்டங்களை எதிர்த்து மாபெரும் போராட்டங்களை நடத்தி வருபவர்மேதாபட்கர்.

மெரீனா கடற்கரையில், மீனவர் குடியிருப்புகளை அகற்றிவிட்டு தலைமைச் செயலகம், நட்சத்திர ஹோட்டல்கள்,தூதரகங்கள் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இந் நிலையில் மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் மீனவர் குடியிருப்புகளுக்கு இன்று அவர் சென்றார். அவரைஆயிரக்கணக்கான மீனவர்கள் வரவேற்றனர்.

மீனவர்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்ட பட்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நட்சத்திர ஹோட்டல்கள், தலைமைச் செயலகத்தை எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் கடலையும்,கடல்வாழ் மீன்களையும் நினைத்த இடத்திற்குக் கொண்டு வந்துவிட முடியாது.

கடலையும், மீன்களையும் மட்டுமே அறிந்த மீனவர்கள் கடலோரத்தில்தான் வாழ முடியும். அவர்களை அங்கிருந்துஅகற்ற நினைப்பது மனிதாபிமானமற்ற செயல். இதன் மூலம் மீனவர்களது வாழ்க்கையையே நாசமாக்கப்பார்க்கிறது தமிழக அரசு.

எனவே, தமிழக அரசு தனது திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி தேசிய அளவில்இயக்கம் தொடங்க உள்ளேன். தமிழக அரசின் அராஜகத் திட்டத்துக்கு எதிராகவும் அப்பாவி மீனவர்களுக்குஆதரவாகவும் தேசிய அளவில் ஆதரவு திரட்டப்படும் எனறார் மேதா பட்கர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X