போலீசார் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவிவிட்டுத் தப்பிய ரெளடிகள்
மதுரை:
சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்படும்போது போலீசார் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு தப்பியோடிய 2குற்றவாளிகளை பொது மக்களும் போலீசாரும் சேர்ந்து விரட்டிப் பிடித்தனர்.
பெரியகுளம் அருகே இச் சம்பவம் நடந்தது. கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குமார், முருகன் ஆகிய இருரெளடிகளையும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் மதுரை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தேனி பஸ் நிலையம் அருகே சென்றபோது காவலுக்கு வந்த ஏட்டையா ஆறுமுகம், போலீஸ்காரர் ராமநாதன் ஆகியோர் முகத்தில்இந்த ரெளடிகள் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு தப்பியோடினர்.
உடனே அருகில் இருந்த பொது மக்கள் அந்த ரெளடிகளை விரட்டிச் சென்றனர். போலீசாரும் முகத்தைத் துடைத்துக் கொண்டுரெளடிகளை விரட்டினர். நீண்ட ஓட்டத்துக்குப் பின் இரு ரெளடிகளும் பிடிபட்டனர்.
அவர்களை பொது மக்கள் மொத்தி எடுத்தனர். போலீசார் தலையிட்டு அவர்களைப் பாதுகாத்து மீணடும் சிறைச்சாலைக்குக்கொண்டு சென்று அடைத்தனர்.


