அதிமுக சார்பில் இன்னொரு வேட்பாளர் மனு தாக்கல்
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் அதிமுக தலைமையின் உத்தரவுப்படி மகளிர் அணித் துணைச் செயலாளர் சுதந்திரவல்லி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
ஏற்கனவே கட்சியின் வேட்பாளராக நீலமேகவர்ணம் அறிவிக்கப்பட்டு அவர் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். மாற்றுவேட்பாளராக அவரது மகன் கிதரவ ஆதித்தனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால், நீலமேகவர்ணம் மீது கிரிமினல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. அதே போல இவரது மகன் கதிரவஆதித்தன் மீதும் ஒரு கொலை வழக்கு உள்ளது. இதனால் இவர்களது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம் என்று அதிமுககருதுகிறது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக இன்னொருவரையும் வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா. உடனே சாத்தான்குளத்தில்வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக உள்ள சுதந்திரவல்லிக்கு நேற்றிரவு ஜெயலலிதாஉத்தரவிட்டார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்பதால் அவர் இன்று அவசர அவசரமாக வேட்பு மனுவை தாக்கல்செய்தார். இவர் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் கவுன்சிலராகவும் உள்ளார். சிவகாசி அருகே உள்ள ஆழ்வார் திருநகரியைஅடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.
இந் நிலையில் நேற்று அதிமுக மாணவரணியைச் சேர்ந்த சரவணகுமார், சாமுவேல் ராஜ், சரவணன் ஆகியோரும் அதிமுக சார்பில்வேட்பு மனு செய்தனர். இவர்கள் ஜெயலலிதாவின் அனுமதி பெற்று வேட்பு மனு தாக்கல் செய்தனரா அல்லது நீலமேகவர்ணத்தின்வேட்பு மனு தள்ளுபடியானால் நமக்கு எப்படியாவது வாய்ப்பு கிடைக்கும் என்ற நப்பாசையில் வேட்பு மனு போட்டனரா என்றுதெரியவில்லை,
அதே நேரத்தில் எதிர்க் கட்சியினர் இடையே புதிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையே திட்டமிட்டு 5 பேரை களத்தில்நிறுத்தியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். வேட்பாளர் என்றால் பிரச்சார வாகனங்கள் பயன்படுத்தலாம், தலைமை தேர்தல்ஏஜெண்டுள், பூத் ஏஜெண்டுகளை ஆகியோரை நியமிக்கலாம்.
ஒரு வேட்பாளருக்கு மட்டும் கட்சியின் கடிதத்தை தந்து இரட்டை இலையை ஒதுக்கி கொள்ளவும், மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்பிரச்சார வாகன கோட்டாவை அதிமுக வேட்பாளருக்கு மறைமுகமாக மாற்றிவிடவும், மற்ற வேட்பாளரின் பெயரின் தங்களதுஏஜெண்டுகள் நிறைய பேரை வாக்குச் சாவடிகளில் நிறுத்தும் அதிமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியினரும்திமுகவினரும் கூறுகின்றனர்.
இதற்கிடையே நீலமேகவர்ணத்தில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால் நான் எனது மனுவை வாபஸ் வாங்கிக்கொள்வேன் என அதிமுகவின் இன்னொரு வேட்பாளரான சுதந்திரவல்லி கூறியுள்ளார். இவரது ஒரு மகளுக்கு கட்சியின் தலைவிஜெயலலிதாவின் பெயரையே சூட்டியுள்ளார்.


