For Daily Alerts
Just In
விசாவுக்கான தடை நீக்கச் சான்றிதழ்கள்: அரசு புதிய உத்தரவு
சென்னை:
வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர் விசா கோரி விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டிய, தடைநீக்கச் சான்றிதழை இனிமேல் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் அல்லது மாநகர காவல் துறைஆணையர்களே வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோடா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தற்போது தடை நீக்கச் சான்றிதழ்கள் உள் துறை மூலமாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதில் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் வந்துள்ளதால் இனிமேல் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள்அல்லது மாநகரக் காவல் துறை ஆணையர்கள் அலுவலகத்திலேயே இந்த சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளஅனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுலவகங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


