மேற்கு வங்காளம்: டீ கடையில் டிரக் புகுந்து 10 பேர் பலி
கல்யாணி (மேற்கு வங்காளம்):
மேற்கு வங்காளத்தில் தறிகெட்டு ஓடிய டிரக் லாரி ஒரு டீக்கடைக்குள் புகுந்த விபத்தில் 10 பேர் உடல் நசுங்கிஉயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஷிமுராலி அருகே தேசிய நெடுஞ்சாலை-34ல்சாலையோரத்தில் ஒரு டீக் கடை இருந்தது.
இவ்வழியாக முர்ஷிதாபாத்துக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய டிரக் லாரியின் டிரைவர் திடீரென்று அதன்கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து அவர் மட்டும் லாரியின் கதவைத் திறந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் தறிகெட்டு ஓடிய டிரக் தடாலென்று கவிழ்ந்து சாலையோரத்திலிருந்த டீக்கடைக்குள் புகுந்தது.
இந்தப் பயங்கர விபத்தில் டீக்கடைக்குள் இருந்த நான்கு பேரும், டிரக்கில் இருந்த ஆறு பேரும் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் 34 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கல்யாணியில்உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தப்பி ஓடிய டிரக்கின் டிரைவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.


