தர்மபுரி மின் கோபுரம் தகர்ப்பு வழக்கு: 6 தமிழ் தீவிரவாதிகளும் விடுதலை
சென்னை:
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே மின்சார கோபுரத்தை வெடிகுண்டு வைத்துதகர்த்தாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தமிழர் விடுதலைப் படைத் தலைவர் மாறன், ரேடியோவெங்கடேசன் உள்ளிட்ட 6 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆனாலும் அவர்கள் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்களை மீண்டும்சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1995ல் அதியமான் கோட்டை அருகே உள்ள பாஹேபள்ளி என்ற இடத்தில் கர்நாடகத்திற்குச்செல்லும் மின்சார விநியோகத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் உயர் அழுத்த மின்சார கோபுரம்வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
இது தொடர்பாக மாறன், ரேடியோ வெங்கடேசன், கலை, சேகர், தங்கவேலு, மாணிக்கம் ஆகிய ஆறுதமிழர் விடுதலைப் படை தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பூந்தமல்லி வெடிகுண்டுகள் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில்நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ராஜேந்திரன் தன் தீர்ப்பில்,
ஆறு பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே அவர்களைவிடுதலை செய்து உத்தரவிடுகிறேன்.
இருப்பினும் அந்த ஆறு பேர் மீதும் ஏராளமான வழக்குகள் இருப்பதால் அவர்கள் தொடர்ந்துசிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடுகிறேன் என்றார் நீதிபதி.
தீர்ப்புக்குப் பிறகு வெளியே வந்த மாறன் நிருபர்களிடம் கூறுகையில், எங்களுக்கு நியாயம்கிடைத்துள்ளது. எங்கள் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பது நிரூபணமாகியுள்ளது என்றார்.
ரேடியோ வெங்கடேசன் கூறுகையில், காவிரி நீரை கர்நாடக அரசு நியாயப்படி திறந்து விடும் வரைநெய்வேலியிலிருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் அனுப்பக் கூடாது. அதை நாங்கள் எப்போதும்வலியுறுத்தி வருகிறோம். இனிமேலும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.


