For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

""கருணாநிதி பேசாமல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யலாம்"": காளிமுத்து

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

சட்டசபைக்கு வந்து மக்கள் பணிகளைப் பார்க்கக் கூடிய ஒரு புதியவரைத் தேர்வு செய்யும்பொருட்டு திமுக தலைவர் கருணாநிதி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.

ஊட்டி அரசுக் கலைக் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட காளிமுத்து பின்னர் நிருபர்களிடம்பேசுகையில்,

சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து பரிதி இளம்வழுதிக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதில் தவறில்லை. அந்த முடிவில் மாற்றமும் இல்லை. பரிதி மீது ஐந்து வழக்குகள்உள்ளன. எனவே எனது முடிவில் தவறேதும் இல்லை.

கருணாநிதிக்கு சட்டசபையில் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பலமுறை கூறியுள்ளேன்.ஆனால் உடல் நலம் சரியில்லை என்ற காரணத்தால்தான் அவர் சபைக்கு வரவில்லை என்றுகூறப்பட்டது. எனவே அத்தோடு நானும் விட்டு விட்டேன்.

ஆனால், சபைக்கு வந்தால் பாதுகாப்பு கிடையாது என்றும் அதிமுகவினர் வன்முறையில்ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் சில முறை சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில்கருணாநிதி கையெழுத்துப் போடுகிறாரே?

அப்போது அதிமுகவினர் நினைத்தால் பிரச்சனை செய்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும்நடக்கவில்லை. அவர்கள் கண்ணித்துடன்தான் உள்ளனர்.

கடந்த 1972ல் திமுக ஆட்சிக் காலத்தில் அக்கட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டுவரப்பட்டது. அப்போது சபாநாயகராக இருந்த மதியழகன் முன்னாள் முதல்வரானஎம்.ஜி.ஆரைப் பேசுவதற்கு அழைத்தார்.

ஆனால் அப்போது எம்.ஜி.ஆரின் மைக் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் சுமார் இரண்டரை மணிநேரம் மைக் எதுவும் இல்லாமலேயே எம்.ஜி.ஆர். பேசினார். பேசி முடித்து விட்டுவெளியேறும்போது பால்கனியில் இருந்த திமுகவினர் அவர் மீது செருப்புக்களை வீசி எறிந்தனர்.

ஆனாலும் அதன் பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கருணாநிதி எதிர்க் கட்சித் தலைவராகஇருந்தபோது கண்ணியமாகவே நடத்தப்பட்டார்.

பின்னர் 1989ல் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டபோது, பட்ஜெட் கூட்டத் தொடரின்போதுதற்போதைய முதல்வரான ஜெயலலிதா பேசுகையில், அவரை திமுகவினர் அடித்து சேலையைப்பிடித்து இழுத்து கேவலப்படுத்தினர்.

ஆனால் பின்னர் வந்த அதிமுக ஆட்சியின்போதும் இப்போது நடந்து வரும் ஆட்சியின்போதும்,கருணாநிதிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இப்போதும்சொல்கிறேன், அவர் சட்டசபைக்கு வந்தால் அவருக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும்.

ஒரு வேளை சட்டசபைக்கு வர இஷ்டம் இல்லையென்றால் பேசாமல் கருணாநிதி தன் பதவியைராஜினாமா செய்துவிடலாம். அதற்குப் பதில் சபைக்கு வந்து மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசக்கூடிய ஒருவருக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்க வாய்ப்பளிக்கலாம்.

அதை விட்டு விட்டு, பள்ளி மாணவன் விடுப்பு எடுக்கும்போது கூறும் காரணங்களைப் போலஅர்த்தமற்ற காரணங்களைக் கூறுவது சரியல்ல.

ஒரு பக்கம் கருணாநிதி சட்டசபைக்கு வருவதில்லை. மறு பக்கம் அவருடைய மகன் ஸ்டாலின் சிலசமயம் சபைக்கு வருகிறார். பல சமயங்களில் வருவதில்லை.

திமுகவுக்குள் இரு பிரிவுகள் உள்ளன. ஸ்டாலின் ஆதரவு எம்.எல்.ஏக்கள்தான் சட்டசபையில்பிரச்சினையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சரான துரைமுருகன்சொல்வதையோ, திமுக பொதுச் செயலாளரான அன்பழகன் சொல்வதையோ அவர்கள்கேட்பதில்லை என்றார் காளிமுத்து.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X