பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 1,300 பேர் கைது
சென்னை:
சென்னை நகர பஸ்களில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த 1,300 பேர் கைது செய்யப்பட்டனர். 3மணி நேர சோதனையில் இத்தனை பேர் பிடிபட்டுள்ளது போலீஸாரையே திகைக்க வைத்துள்ளது.
சென்னையில் ஓடும் டவுண் பஸ்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்வது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பல முறை விபத்துக்களும் நடக்கின்றன.
படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து இறப்பது, படிக்கட்டில் பயணம் செய்தவாறே சாலையில் செல்லும்பெண்களை ஈவ் டீசிங் செய்வது, சங்கிலிகளைப் பறிப்பது என பல குற்றச் செயல்களும் இதனால்அதிகரித்த வண்ணம் உள்ளன.
இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் நின்று கொண்டுபயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் அறிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் தற்போது ஆங்காங்கே சோதனைகளும் நடத்தப்பட்டுவருகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற சோதனைகளின்போது சுமார் 3 மணி நேரத்தில் 1,300 பேர் படிக்கட்டில்நின்று கொண்டு பயணம் செய்ததாகப் பிடிபட்டனர். அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்கள்மீது வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர்.
மூன்று மணி நேரத்தில் 1,300 பேர் பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததாகக் கைதுசெய்யப்பட்டிருப்பது போலீஸாரையே திகைக்க வைத்துள்ளது.


