அதிமுக ஆணவச் சேட்டைகள் அளவு மீறுகிறது: கருணாநிதி
சென்னை:
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக ஆட்சியின் ஆணவச்சேட்டைகள் அளவு மீறிப் போய்க் கொண்டிருப்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
பொன்முடி கைது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் நடந்த அரசுவிழாவை அதிமுக கட்சி நிகழ்ச்சியாக நடத்துவதைக் கண்டித்து பொன்முடியும் நகராட்சித் தலைவர்பன்னீர்செல்வமும் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.
அதை உணர்ந்த அவரும் கட்-அவுட்கள், வரவேற்பு வளைவுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார்.அதன்படி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
இதைக் கண்டித்து அதிகாரிகள் மீதும் திமுகவினர் மீதும் அதிமுகவினர் வன்முறையைக்கட்டவிழ்த்துள்ளனர். நிலைமை இப்படியிருக்க அதிமுகவினர் மீது போலீஸார் நடவடிக்கைஎடுக்காமல் பொன்முடியைக் கைது செய்துள்ளனர்.
அதிமுகவினரின் ஆணவ, அராஜக சேட்டைகள் அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருப்பதையே இதுகாட்டுகிறது. அதிமுக ஆட்சியின் அடாவடிக்கு அளவே இல்லையா என்று கேட்கும் அளவுக்கு இந்தஆட்சியின் லட்சணம் இருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.


