• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பை: இந்தியாவிடம் மண்ணைக் கவ்விய பாக்.

By Staff
|

செஞ்சூரியன் (தென் ஆப்பிரிக்கா):

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியைஇந்தியா அபாரமாகத் தோற்கடித்தது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள்பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

கார்கில் போருக்குப் பின் பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்லாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத்தெரிவித்து விட்டது. இதனால் இந்தியாவில் பாகிஸ்தான் அணியினர் சுற்றுப் பயணம் மேற்கொண்டும்,பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாடியும் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

மேலும் இரண்டு அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதியே இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.கடைசியாக 2000ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி ஆசியக் கோப்பை போட்டிக்காக பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில்இரு அணிகளும் மோதின. அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியில் இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் இன்று மோதினர். பாகிஸ்தான்அணி "டாஸ்" வென்று முதலில் "பேட்" செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 273ரன்களை அது எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டம் ஆடி அணியின் ஸ்கோரைமளமளவென உயர்த்தினார்கள். தொடக்க ஆட்டக்காரர்களான இந்தியாவின் நம்பிக்கை சச்சின் டெண்டுல்கர்மற்றும் வீரேந்திர சேவாக் கிடைக்கும் பந்துகளை எல்லாம் எல்லைக் கோட்டுக்கு விரட்டினார்கள்.

சேவாக் திடீரென்று அவுட் ஆன போதிலும் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி ஆட்டத்தின் போக்கைவிறுவிறுப்பாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. ஆகிபெவிலியன் நோக்கித் திரும்பினார்.

இருந்தாலும் அதற்குப் பின்னர் வந்த அனைவருமே பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் ஸ்கோரைஉயர்த்தினர். டெண்டுல்கர் செஞ்சுரி அடிக்கவிருந்த நிலையில் துரதிருஷ்டவசமாக 98 ரன்களிலேயே அவுட் ஆகிவெளியேறினார். இன்றைய ஆட்டத்தின்போது அவர் ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்து உலகசாதனை புரிந்தார்.

கடைசியில் ராகுல் டிராவிட்டும், யுவராஜ் சிங்கும் சேர்ந்து வெகு அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தனர்.

"சூப்பர் சிக்ஸ்" சுற்றுக்கு அனேகமாக ஏற்கனவே தகுதி பெற்றுள்ளபோதிலும் பரம எதிரியான பாகிஸ்தான்அணியை இந்தியா தோற்கடிக்குமா என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருந்தது. இந்தக் கேள்விக்குப்பதிலளிக்கும் வகையில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபாரமாக வென்றது.

முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் பெரும்பாலானவற்றில் பாகிஸ்தானை இந்தியாதான் தோற்கடித்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இன்றும் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் இந்தியாவே வெற்றி பெற வேண்டும் என்று இங்கிலாந்து அணியும், ஜிம்பாப்வே அணியும்விரும்பின. அப்போதுதான் அந்த அணிகள் "சூப்பர் சிக்ஸ்" சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள்அதிகரிக்கும். அதன்படியே இந்தியா இன்று வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

பாகிஸ்தான் - 273/7

இந்தியா - 276/4

ஆட்ட நாயகன் - சச்சின் டெண்டுல்கர்

ரசிகர்கள் கொண்டாட்டம்:

பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்ததையடுத்து நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாக வெள்ளம்கரை புரண்டு ஓடியது.

வெற்றி இலக்கை இந்தியா தொட்டபோது இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக்கொண்டாடினர். "இந்திய கிரிக்கெட்டுக்கு ஜே" என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

உலகக் கோப்பையை வெல்கிறோமோ இல்லையோ, பாகிஸ்தானைக் கட்டாயம் தோற்கடித்தாக வேண்டும்என்றுதான் அனைத்து ரசிகர்களும் வேண்டிக் கொண்டிருந்தனர். அதுபோலவே ரசிகர்களுக்கு இந்திய அணிவீரர்கள் வெற்றியைச் சமர்ப்பித்து விட்டனர்.

சூப்பர் சிக்ஸ் ஆட்டங்களிலும் இதைப் போலவே இந்தியா வெற்றிகளைப் பெற்று, இறுதியில உலகக் கோப்பையைவெல்ல வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாகும். இந்தியா சாதிக்குமா?

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X