For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டனில் வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ்சுக்கு கடும் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

ஆர்.எஸ்.எஸ்சின் சர்வதேச அமைப்பான எச்.எஸ்.எஸ். தன்னை சமூக நல அமைப்பாக பதிவு செய்து கொண்டு பலஐரோப்பிய நாட்டு அரசுகளிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று வருகிறது.

இந் நிலையில் இந்த அமைப்புக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்துமாறு ஐரோப்பிய அரசுகளுக்கு லண்டனைச்சேர்ந்த தெற்காசிய ஒற்றுமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்து ஸ்வயம் சேவக் (எச்.எஸ்.எஸ்.), சேவா இன்டர்நேசனல், விஸ்வ இந்து பரிஷத் யு.கே. ஆகியவைஇங்கிலாந்திலும் தங்களை சமூக நல அமைப்புகளாகப் பதிவு செய்து கொண்டுள்ளன. இந்த அமைப்புகள்ஐரோப்பிய அரசுகள், தொழில் நிறுவனங்கள், தனியார் ஆகியோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துஇந்தியாவில் உள்ள தங்கள் கிளைகளுக்கு அனுப்புகின்றன.

ஒரிஸ்ஸாவில் ஜெர்மன் பாதிரியாரை அவரது குழந்தைகளுடன் ஜீப்பில் வைத்து எரித்துக் கொன்றதையடுத்துஇந்த அமைப்புகள் ஐரோப்பாவில் பணம் திரட்டலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த ஆண்டு குஜராத்தில்நடந்த மதக் கலவரத்தையடுத்து இந்த நிதி திரட்டலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

தெற்காசிய ஒற்றுமை அமைப்பு தான் இந்த எதிர்ப்பை முன்னின்று காட்டி வருகிறது. குஜராத் மதக் கலவரத்தில்இறந்தவர்களுக்கு நேற்று லண்டனில் இந்த அமைப்பு அஞ்சலி செலுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள்மெழுகுவர்த்திகளை ஏற்றி இந்த அஞ்சலியைச் செலுத்தினர்.

பின்னர் இதில் பேசிய பலரும், ஐரோப்பிய நாடுகளில் சமூக சேவை அமைப்பாக தங்களைப் பதிவு செய்துள்ளஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. ஆகியவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக ஒரு மனுவையும் பிரிட்டிஷ் அரசிடம் தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூக சேவை அமைப்புகளாகக் காட்டிக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் திரட்டி அதை இந்தியாவில் மதமோதலகளை நடத்த பயன்படுத்தி வருகின்றனர்.

குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் தொடர்புடைய நரேந்திர மோடி அரசைச் சேர்ந்த எந்த எம்.எல்.ஏவும்தண்டிக்கப்படவில்லை. கலவரத்தை முன்னின்று நடத்தி உயிர்களைப் பழிவாங்கிய ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி.,பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைத் சேர்ந்த கும்பல்களும் தண்டிக்கப்படவில்லை.

ஆனால், பிரிட்டனில் தங்களை இவர்கள் சமூக சேவை அமைப்புகளாக் கூறிக் கொண்டு பணம் திரட்டுகின்றன.மேலும் பிரிட்டனிலும் கூட மத வேறுபாடுகளை ஏற்படுத்தும் செயல்களை இந்த அமைப்புகள் தொடங்கிவிட்டன.

முதல்கட்டமாக ஆசியர்களை மதரீதியில் இவர்கள் அடையாளப்படுத்தி பிரிக்க முயன்று வருகின்றனர். இந்தநாட்டுக்கு இது நல்லதல்ல. எனவே, இந்த அமைப்புகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்து இங்கு பணம்திரட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X