For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக- மதிமுக நெருக்குதல்: பொடா சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளதால் அச் சட்டத்தைத் திருத்த கமிட்டி அமைப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது.

இந்த சர்ச்சைக்குரிய பொடா சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடந்தபோது அதிமுக, திமுகஎம்.பிக்கள் கடுமையாக மோதிக் கொண்டனர்.

பொடா சட்டத்தை சில மாநிலங்கள் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக இன்று ராஜ்யசபாவில் விவாதம்நடந்தது.

அப்போது பேசிய திமுக எம்.பி. விடுதலை விரும்பி, தமிழக முதல்வர் ஜெயலலிதா பொடா சட்டத்தை மிகவும்தவறாகப் பயன்படுத்தி வருகிறார். இந்த விஷயத்தில் தமிழகத்தை மத்திய அரசு எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறதுஎன்று கேள்வி எழுப்பினார்.

உடனே, அதிமுக எம்.பிக்கள் குறுக்கிட்டு இதை மறுத்தனர். "பொடா சட்டம் சரியான முறையில்தான்பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொடா சட்டத்தை மீறி நடந்து கொண்டவர்கள்தான்தண்டிக்கப்படுகின்றனர்" என்று அவர்கள் கூறினர்.

ஆனால் திமுக எம்.பிக்கள் தொடர்ந்து தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினர். அரசுக்கு எதிராக யாராவது வாயைத் திறந்தால் பொடா சட்டத்தைக் காட்டிமிரட்டுகிறார்கள். எங்களைக் கூட அச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாகவும் தமிழக அரசு மிரட்டிக்கொண்டிருக்கிறது என திமுக எம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.

இந் நிலையில் திமுக எம்.பிக்களைப் பார்த்து அதிமுக எம்.பிக்கள் ஏதோ சொல்ல பதிலுக்கு திமுக எம்.பிக்களும்குரல் எழுப்பினர். ஒருவரை ஒருவர் நோக்கி கையை நீட்டி உரத்த குரலில் ஒருமையில் திட்டிக் கொண்டனர்.இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பொடா சட்டத்தைத் திருத்துவது தொடர்பான கமிட்டிஅமைப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. எனவே உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.

இதன் பின்னரும் திமுக- அதிமுக எம்.பிக்களிடையே மோதல் தொடர்ந்து. பிற கட்சியினர் தலையிட்டு இருதரப்பினயும் சமாதானப்படுத்திய பின்னரே அமைதி திரும்பியது.

வைகோவின் உணர்ச்சிக் கடிதம்:

இதற்கிடையே இரு நாட்களுக்கு முன் நடந்த மதிமுக பொதுக் குழுவுக்கு வைகோ ஒரு கடிதத்தை அனுப்பியிருந்ததுதெரியவந்துள்ளது. அந்தக் கடிதத்தில் துணைப் பிரதமர் அத்வானியை வைகோ கடுமையாகத் தாக்கியுள்ளார்.இதனை மதிமுக பொதுக் குழு உறுப்பினர் ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அந்தக் கடிதம் பொதுக் குழுவில் படிக்கப்பட்டபோது பல உறுப்பினர்களும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளனர்.கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அக் கடிதத்தைப் படித்தபோதே அழுதுள்ளார்.

வைகோ எழுதிய அந்த உணர்ச்சிக் கடிதத்தின் ஹை-லைட் :

நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமர் அத்வானி மீது மதக் கலவரத்தை வைத்து ஒரு குற்றச்சாட்டு வந்தது. அவரைமதவாதி என காங்கிரஸ் எம்.பிக்கள் குற்றம் சாட்டினர். நான் அதை எதிர்த்து அத்வானிக்காக வாதிட்டேன்.

அதற்காக அத்வானியைவிட்டுவிட்டு என் பக்கம் திரும்பிய காங்கிரசார், நீ ஒரு புலி ஆதரவாளன் என்றனர்.இதற்கு, நேற்றும் இன்றும் நாளையும் நான் புலி ஆதரவாளன் தான் என்று நாடாளுமன்றத்தில் பதில் சொன்னேன்.அதையே தான் மதுரை திருமங்கலம் கூட்டத்திலும் பேசினேன். அதற்காக என்னை ஜெயலலிதா பொடா சட்டத்தில்கீழ் சிறையில் தள்ளினார்.

இந் நிலையில் நாடாளுமன்றத்தில் அத்வானி ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். பொடா சட்டத்தின் கீழ்யாராவது ரூ. 100 அபராதம் செலுத்திவிட்டாலோ, அல்லது இரண்டே நாட்கள் தண்டனை பெற்றுவிட்டாலோஅடுத்த 6 ஆணடுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் சொல்கிறது.

இதன் மூலம் அத்வானி யாரைக் குறி வைக்கிறார்? கூட்டணித் தலைவரான என்னைக் குறி வைத்துத் தானே இந்தச்சட்டத் திருத்தம். பொடாவில் நான் தண்டிக்கப்பட்டாலும் தேர்தலில் நிற்க முடியாமல் போனாலும் குடிமூழ்கியாவிடும்?

தந்தை பெரியார், காரல் மார்க்ஸ், லெனின், இங்கர்சால் ஆகியோர் தேர்தலிலா போட்டியிட்டார்கள். அவர்களின்பட்டியலில் என் பெயரையும் இணைத்துக் கொள்கிறேன். (இந்த இடத்தில் நாஞ்சில் சம்பத் நா தழுதழுக்க.. மதிமுகபொதுக் குழுவினர் கண் கலங்கினர்).

நமக்கு பதவியை விட கொள்கையே முக்கியம். திமுகவுடன் இணைந்து பாடுபடுங்கள். மத வெறி நச்சுப்பாம்புகளிடமிருந்து தமிழகத்தைக் காக்க அதிமுகவை வீழ்த்துவோம் என அக் கடிதத்தில் கூறியிருக்கிறாராம்வைகோ.

இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிவிட மதிமுக முடிவெடுப்பதாகஇருந்ததாகவும் அவசரப்பட வேண்டாம் என திமுக தரப்பில் இருந்து வந்த யோசனை காரணமாகவே அந்த முடிவுதவிர்க்கப்பட்டதாகவும் தெரிகிறது.

மேலும் சமீபத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டதிலும் வைகோவை விடுவிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைஎடுக்கப் போகிறது என தெலுங்கு தேசம், திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் அத்வானிக்கு கிடுக்கிப்பிடி போட்டனஎன்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நெருக்குதல்களால் தான் பொடா சட்டத்தைத் திருத்துவது குறித்து கமிட்டியை அமைக்க யோசித்து வருவதாகமத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

அதே போல பொடா சட்டத்தில் கைதானவர் ஒரு வருடத்துக்கு முன் ஜாமீன் கோர முடியாது என்ற விதி ஏதும்இல்லை என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனிடம் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம் இந்த மனுவை அவர் பொடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்எனவும் கூறியுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X