திலகவதி திடீர் இடமாற்றம்: லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனராக அவரது முன்னாள் கணவர் நியமனம்
சென்னை:
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவியிலிருந்து ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக ஓராண்டுக்கு முன் திலகவதி நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலத்தில் ஏராளமான முன்னாள் திமுக அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறைஅதிகாரிகள் அதிரடி ரெய்டுகளை நடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால், இதுவரை எந்த வழக்கிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. போதிய ஆதாரங்கள்சிக்காததே இதற்குக் காரணம் என்று தெரிகிறது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவியிலிருந்து திலகவதியை நீக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
திலகவதி இனிமேல் மகளிர் போலீஸ் கூடுதல் டி.ஜி.பியாகவும், மகளிர் போலீஸ் நிலையங்களுக்கானதலைவராகவும் செயல்படுவார். பெண்கள் தொடர்பான கொடுமைகள் மற்றும் பெண் காவல் நிலையங்கள் இவரது பொறுப்பில்இருக்கும்.
இதுவரை பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக இருந்து வந்த நாஞ்சில் குமரன் தற்போது லஞ்ச ஒழிப்புஇயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திலகவதியின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக சுப்பிரமணியம் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே வேறு பல போலீஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


