For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்கள் சித்திரவதை: மீண்டும் மன்னிப்பு கோரும் மலேசியா

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:

சாப்ட்வேர் என்ஜினியர்கள் உள்ளிட்ட 270 இந்தியர்களை மலேசியப் போலீசார் சித்திரவதைசெய்தது தொடர்பாக மலேசிய பிரதமர் பொறுப்பு வகிக்கும் தாதுக் செரி அப்துல்லா அகமது படாவிமன்னிப்பு கோரியுள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இவ்வாரத் துவக்கத்தில் 270 இந்தியர்களைமலேசிய போலீசார் அடித்து, உதைத்து சித்திரவதை செய்தனர். அவர்களுடையபாஸ்போர்ட்டுகளையும், அதில் உள்ள விசா பக்கங்களையும் கூட அவர்கள் சேதப்படுத்தினர்.

மலேசியப் போலீசாரின் இந்தச் செய்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும்மலேசியாவுக்கு எதிராகப் பல தீவிரமான நடவடிக்கைகளையும் இந்திய எடுக்க ஆரம்பித்துள்ளது.

இம்மாத இறுதியில் மலேசிய அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருவதாக இருந்தது. ஆனால்தற்போது நிலைமை சரியில்லாத காரணத்தால் அவரை வர வேண்டாம் என்று இந்தியா கூறி விட்டது.

இதற்கிடையே இந்தியாவில் படிக்கும் மலேசிய மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்திற்குஅருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்களா என்பதைக்கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இற்தியாவில் உள்ள மலேசிய மாணவர்களைக் கண்காணிக்கும் பணிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலேசிய பிரதமர் பொறுப்பு வகிக்கும் அப்துல்லா, இந்தியர்கள் மீது மலேசியப்போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாகஅடுத்த வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் போலீஸ்அதிகாரிகளுக்கு அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்தஅப்துல்லா, மலேசிய போலீசார் வழக்கமான சோதனைகளில்தான் ஈடுபட்டிருந்தனர் என்றார்.

இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சமீபத்தில் டெல்லி சென்றிருந்தமலேசிய அமைச்சர் ஒருவர் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X