For Daily Alerts
Just In
மண் சரிவால் ரத்தான ஊட்டி மலை ரயில் மீண்டும் ஓடியது
ஊட்டி:
மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
மேட்டுப்பாளையம், குன்னூருக்கு இடையிலான ஊட்டி மலை ரயில் ஒரு சில நாட்களுக்கு முன்புபெய்த மழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்டது.
இதனால் ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.மேட்டுப்பாளையத்திலிருந்து பஸ் மூலமே அவர்கள் ஊட்டிக்குச் சென்றனர்.
இந்நிலையில் மண் சரிவு சரி செய்யப்பட்டு இன்று ஊட்டி மலை ரயில் மீண்டும் இயங்கத்தொடங்கியது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் சந்தோஷமடைந்துள்ளனர்.


