கல்லூரி முதல்வரை "சிறை" வைத்த மாணவ, மாணவிகள்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தனியார் கல்லூரியின் முதல்வரை அறைக்குள் வைத்துப்பூட்டி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
கருங்கல் அருகே தொளைய வட்டம் என்ற இடத்தில் அன்னை வேளாங்கண்ணி என்ற தனியார்கல்லூரி உள்ளது. இங்கு சமீபத்தில் நடந்த கல்லூரி ஆண்டு விழாவின்போது வெளியாட்கள்சிலருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது கல்லூரியின் ஆடிட்டோரியம் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரிகாலவரையின்றி மூடப்பட்டது.
இந்நிலையில் கல்லூரியை மீண்டும் திறக்கக் கோரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் கல்லூரி முதல்வர் இதற்கு மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து நேற்றுகல்லூரிக்குத் திரண்டு வந்த மாணவ, மாணவிகள் முதல்வரை அவரது அறைக்குள் வைத்துப்பூட்டினர்.
பின்னர் வகுப்பறைகளில் இருந்த மேஜை, நாற்காலிகளை அவர் தாக்கி உடைத்தனர். இதையடுத்துகல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து விரைந்த போலீஸார் மாணவ, மாணவியரைக் கலைந்து போகுமாறு கூறினர். ஆனால்அவர்கள் அதைக் கேட்கவில்லை. இதனால் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் அறையைத் திறந்துவிடச் சென்ற போலீஸாரையும் அவர்கள்தடுத்து விட்டனர்.
போலீஸாரின் நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இரவு 7 மணியளவில் கல்லூரி முதல்வர்விடுவிக்கப்பட்டார்.
கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா:
இதற்கிடையே கோயம்புத்தூரில் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்நடத்தினர்.
இந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவர் மீது கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒழுங்குநடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்டும் செய்தது.
இதைக் கண்டித்து கோயம்புத்தூர் சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை முதல் உள்ளிருப்புப்போராட்டத்தை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத்திரும்பப் பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும அவர்கள் கூறினர்.
கல்லூரி நிர்வாகம் எவ்வளவோ கூறியும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்திலிருந்தும் அதிகாரிகள் வந்து சமாதானம் செய்ய முயன்றனர்.ஆனாலும் மாணவர்கள் கேட்கவில்லை.
நேற்று இரவு முழுவதும் கல்லூரிக்குள்ளேயே அமர்ந்திருந்த மாணவர்கள் இன்றும் தங்கள்போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி (ஆர்.டி.ஓ.) இன்று வந்து மாணவர்களுடனும்நிர்வாகத்தினருடனும் பேசினார். இதையடுத்து குறிப்பிட்ட அந்த மாணவன் சஸ்பெண்ட்செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அடுத்த மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல்செய்யப்படும் என்று மாணவர்களிடம் உறுதி அளித்தார் ஆர்.டி.ஓ.
இதையடுத்து இன்று பிற்பகலில் மாணவர்கள் தங்கள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.


