600 அடி ஆழ "போர்வெல்" குழாயில் விழுந்த சிறுவன் பரிதாப சாவு
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் திறந்த வெளி 600அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை மீட்க தீயணைப்புப்படையினரும் பொது மக்களும் தீவிரமாகப் போராடிய போதிலும் அவன் பரிதாபமாகஉயிரிழந்தான்.
பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான பாக்குத் தோட்டம்உள்ளது. இங்கு திறந்த வெளியில் ஒரு ஆழ்துளைக் கிணறு உள்ளது. கடந்த இரண்டு மாதமாக இதுதிறந்தே கிடக்கிறது.
இந்நிலையில் ரஞ்சித் என்ற 5 வயது சிறுவன் இப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோதுதிடீரென்று தவறி கிணற்றிற்குள் விழுந்து விட்டான். பாக்குத் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இதைப் பார்த்து ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் சிறுவன் குழிக்குள்சென்று விட்டான்.
இதையடுத்து உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் பறந்தது. அவர்களும் விரைந்துவந்தார்கள். சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆக்சிஜன்செலுத்தப்பட்டது.
குழியில் சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட அந்தச் சிறுவனை மீட்க தீயணைப்புத்துறையினரும் பொதுமக்களும் விடிய விடியப் போராடினார்கள்.
அந்தக் குழிக்கு அருகிலேயே போக்லைன் எந்திரம் மூலம் பெரிய குழி தோண்டப்பட்டு அதன் மூலம்சிறுவனை மீட்க தீயணைப்புத் துறையினர் முயற்சித்தனர். ஆனால் 40 அடி ஆழத்தை எட்டுவதற்குமுன்பாகவே அங்கு பாறை தட்டுப்பட்டு விட்டது.
இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இருந்தாலும் சிறுவனுக்குத் தொடர்ந்து ஆக்சிஜன்செலுத்தப்பட்டு வந்தது. வேறு வழிகளில் ரஞ்சித்தை மீட்க தீயணைப்புத் துறையினர் முயற்சித்தனர்.
ஆனால் இன்று காலை சுமார் 11 மணிக்கு ரஞ்சித் குழிக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தான்.இதனால் அவனுடைய பெற்றோரும் தீயணைப்புத் துறையினரும் பொதுமக்களும் பெரிதும்அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் ரஞ்சித்தின் உடலை மீட்கும் பணியை தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர். நீளமானகொக்கி மூலம் அவனுடைய உடல் பகல் சுமார் 12 மணிக்கு மீட்கப்பட்டது.
ரஞ்சித்தின் உடலைப் பார்த்து அவனுடைய பெற்றோர் கதறிய கதறலைப் பார்த்து சுற்றிலும் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் கண் கலங்கினர். ரஞ்சித் இறந்தது அப்பகுதி முழுவதும்கடும் சோகத்தைக் கிளப்பியுள்ளது.


